மரண வாக்குமூலம்

| Friday, October 14, 2016
(இலண்டன் பெருநகரத்திலிருந்து வெளிவரும் The Guardian நாளிதழ் அண்மை ஆண்டுகளில் பதிப்பித்த கட்டுரைகளில் சிறந்த 100-ஐத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய இணையத் தளத்தில் பதிவேற்றியுள்ளது.  இந்தக் கட்டுரை நான்காவது சிறந்த கட்டுரை.  தமிழில்: முனைவர் மு.பிரபு) 

சந்திக்க ஆசைப்பட்ட ஆனால் முடியாத பெண்களின் பெயர்கள் அந்தப் பட்டியல்களில் இல்லை.  செய்திருக்க வேண்டிய சாகசங்களும் குறிப்பிடப்படவில்லை.  தீராத நோய்மையில் விழுந்து கடைசி நாட்களை கடக்கும் மனிதர்களைப் பேணும் தாதியான ப்ரானி வேர் (Bronnie Ware) அவர்களின் அனுபவத்தின் படி, மனிதர்கள் தங்களது வாழ்நாளின் கடைசியில் எதற்காக கவலையுறுகிறார்கள் என்பதான பட்டியல் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.  "நான் இன்னும் அதிகமாக உழைத்திருக்கலாம்" என்பது ஆண்களின் முதலாவது வருத்தமாக இருக்கிறது.

வயது முதிர்ந்து தீரா நோயமைகளுக்கு ஆட்பட்டு அவதியுறுபவர்களைப் பேணும் தாதியான (palliative nurse) ப்ரானி வேர் ஆஸ்திரேலியாவில் பணி புரிகிறார்.  நோயாளிகளின் கடைசி பனிரெண்டு வாரங்களில் அவர்களுடைய வருத்தங்கள் எவை பற்றியதாக இருக்கிறது என்பது பற்றி அவர்களிடம் தான் வருடக்கணக்காக நடத்தி வந்திருக்கும் சம்பாஷணையின் அடிப்படையில் ' மனுஷ வருத்தங்களைப்' பட்டியலிடுகிறார்.  இன்னும் ஒரு படி மேலே போய் The Top Five Regrets of the Dying என்ற நூலையும் எழுதியுள்ளார்.  

ப்ரானி வேர் சொல்கிறார்: "மனிதர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசி நாட்களில் அசாதரணமான ஞானத்துடன் ஒளிர்கிறார்கள்.  அவர்களிடமிருந்து மற்றவர்கள்  தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது."  நீங்கள் வாழ்வதற்கு இன்னொரு முறை வாய்ப்பு தரப்படுமானால், எதையாவது வேறு மாதிரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஒரே மாதியான பதில்களே திரும்பத் திரும்பக் கிடைக்கின்றன.  

[1] மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாமல், எனக்கு உண்மையாக நான் விரும்பியவாறு வாழ்ந்திருக்கலாம். 

இதுதான் பெரும்பாலோரின் மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.  தனது வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், எந்தக் கனவுகள் நிறைவேறாமலேயே போய் விட்டன என்பது எளிதாகத் தெரிகிறது.  நிறைய பேர் தங்களது கனவுகளில் பாதியைக் கூட நிறைவேற்றியிருக்கவில்லை.  'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதற்கேற்ப, இப்படியான நிலை தாங்களே சுய பிரக்ஞையோடு தேர்ந்தெடுத்த பாதையால்தான் என்றும் சொல்கிறார்கள்.  உடல் ஆரோக்கியம் தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற முக்கியமானது என்றும் பலர் சொல்கின்றனர்.

[2] நான் இன்னும் சிரத்தையோடு உழைத்திருக்கலாம்   

ப்ரானி வேர் பேணி வந்த அனைத்து ஆண் நோயாளிகளும் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்கள்.  தங்களது குழந்தைகளின் சிறு பிராயத்தில் அவர்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்பதும், தங்களது வாழ்க்கைத் துணையுடன்  இன்னும் மனநெருக்கத்துடன் இருந்திருக்கலாம் என்பதும் அவர்களின் விட்ட குறையாக இருக்கிறது. பெண் நோயாளிகளும் இதே கவலைகளைப் பற்றி பேசினாலும், அவர்களின் நிறைய பேர் சம்பாதிப்பவர்களாக இருந்திருக்கவில்லை. பணி இடத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து விட்டோம் என்பது ஆண் நோயாளிகளின் வருத்தமாக வெளிப்படுகிறது.  

[3] எனது உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கலாம் 

மற்றவர்களுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்ற காரணத்தினாலேயே பலர் தங்களது உணர்வுகளை அடக்கி வைத்திருந்தனர்.  இதன் காரணமாக, நான் என்னவாக முடிந்திருக்குமோ, அதுவாக முடியாமல் ஏனோதானோ வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது என்றும் பலர் குறிப்பிடுகிறார்கள்.  தங்களுள் ஆண்டுக்கணக்கில் தேக்கி வைத்திருந்த கசப்பு மற்றும் வெறுப்புகள் காரணமாகவே நோய்மையில் விழுந்துள்ளதாகவும் பலர் சொல்கிறார்கள். 

[4] எனது நண்பர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் 

கடைசி நாட்களில்தான் தங்களின் பழைய நண்பர்களின் அருமையைப் புரிந்துகொள்கின்றனர் பலர்.  ஆனால், தன் கடைசி நாட்களில் நண்பர்களைத் தொடர்பு கொள்வது பல சமயங்களில் இயலாமல் போய்விடுகிறது.  சொந்த வாழ்வின் நெருக்கடிகளால், தங்களுக்கு வாய்த்த அற்புதமான நட்புகளைத் தொடர முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை இவர்களுக்குத் தந்தபடி இருக்கிறது.  நட்புகளுக்காக போதுமான அளவு நேரத்தையும் முயற்சியையும் ஒதுக்காமல் போனது தவறு என்றும் பலர் வருந்துகிறார்கள்.  இறக்கும் தருணத்தில் தான் பேணாத ஆனால் பேணியிருக்க வேண்டிய நட்பு விசுவரூபம் எடுத்து இவர்களை வெறித்தவாறு இருக்கிறது. 

[5] இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் 

அனைவருமே இதைக் குறிப்பிடுகிறார்கள்.  தங்களது இறுதி நாட்களில்தான், மகிழ்ச்சி என்பது உண்மையில் ஒருவர் தேர்ந்தெடுக்கும் மனநிலை என்பதை உணர்கிறார்கள்.  தங்களுடைய பல சம்பிரதாயங்களை - பழக்கங்களை விட்டொழித்திருக்க வேண்டும் என்று நினைப்பதைத் தவிர, பழகிய சூழல் - பழகிய மனிதர்கள் - பழகிய இடம் என்பவற்றோடு பிணைக்கப்பட்டிருந்தது தவறா என்றும் பலர் யோசிக்கிறார்கள்.  மாற்றத்தைப் பற்றிய பயம்தான் தங்களைத் தடுத்தது என்றும், அந்தப் பயத்தை தம்மிடமிருந்தும் பிறரிடமிருந்தும் மறைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது என்றும், மீண்டும் வாழ வாய்ப்புக் கிடைக்குமானால் அதிகம் சிரிக்க ஆசைப்படுவதாகவும், சிறுபிள்ளைகளுக்கே உரிய விளையாட்டுத்தனத்தோடு வாழ விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.

இந்தப் பத்தியின் துவக்கத்தில் சொன்னபடி, ஒரு மனிதன் தன் வாழ்நாளின் இறுதி நாட்களில்தான் பெரிய ஞானவானாக கனிகிறான். அப்படியென்றால், அவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்க முடியும். சரிதானே?

0 comments:

Post a Comment