பொறுமைக்கல்
இன்றைய
தி ஹிந்து தமிழ் பதிப்பில் தலையங்கப் பக்கத்தில் ஸ்ரீராம் அவர்கள்
எழுதியிருக்கும் 'பொறுமைக்கல்' என்ற கட்டுரை மிகவும் சிறப்பாக
அமைந்துள்ளது. அதிக் ரகமி என்பார் ஃபிரெஞ்ச் மொழியில் எழுதியுள்ள நாவலை
அவரே திரைப்படமாக எடுத்துள்ளார். ஆப்கன் கலாச்சாரம், பண்பாடு, பழக்க
வழக்கங்கள் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணில் இருந்து கதை மிதந்து வருகிறது.
அவர்களது கலாச்சாரத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற இந்த பொறுமைக்கல்,
தன்னிடம் வந்து மனிதர்கள் சொல்லும் அவர்களது சோதனைகள், வலி, துயரம் ஆகிய
அனைத்தையும் கேட்டுக்கொண்டு 'கல்லாக' உட்கார்ந்திருக்கிறது. அதனிடம்
சொல்வது என்பது தங்களுக்கு ஆறுதலையும் விடிவையும் அளிக்கும் என்பதால்,
மனிதர்கள் தங்களது ரணங்களை சொல்லிய வண்ணமே உள்ளனர். கதையின் நாயகி, வயதான
தன் கணவன் போரில் படுகாயமுற்று குற்றுயிராக நினைவு தப்பி படுக்கையில்
உள்ளதால், அவனையே 'பொறுமைக்கல்லாக' உருவகித்து தன்னுடைய துயரங்கள்,
அபிலாஷைகள், ஆசைகள், வலிகள் என எல்லாவற்றையும் சொல்லுகிறாள். தன்னுடைய
உடல் விடுக்கும் ஆங்காரமான வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் தவிக்கும்
அவள், 'பொறுமைக்கல்லாக' இருக்கும் தனது கணவனின் எதிரே ஓர் போர் வீரனுடன்
பாலுறவு கொள்கிறாள். அடிக்கடி நடக்கும் குண்டு வீச்சுக்களின் போது, கணவனை
முன்னறையிலேயே கிடத்தி விட்டு, மற்றவர்களுடன் பாதாள அறையில் ஒளிந்து
கொள்கிறாள். திரும்பி வந்து பொறுமைக்கல் கணவனிடம் எல்லாவற்றையும்
சொல்கிறாள்.
அதிக் ரகமி சொற்களையும் உடல் மொழியையும் இணைத்து
சொல்லும் கருத்து முக்கியத்துவமானது. கதையில், சொற்கள் உடல் மொழியை
சொல்வதாகவும், திரையில் உடல்மொழிக்குள் சொற்கள் இருப்பதாகவும் இவர் சொல்வது
கவனத்திற்குரியது.
இந்தக் கதை என்னதான் சொல்கிறது? மரபின் வழி
வந்த கடுமையான கட்டுத் திட்டங்களுடன் தொடரும் சமூகங்களில், தனி மனிதன்
தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுவதில்லை. அமைப்பின்
ஒரு புறக்கணிக்கத்தக்க சிறு துரும்பே தனி மனிதன்.
வேண்டுமானால், 'பொறுமைக்கல்லிடம்' சென்று கதறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக!
வேண்டுமானால், 'பொறுமைக்கல்லிடம்' சென்று கதறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக!
----
Gravity
என்ற படம் 2013-ல் வெளிவந்தது. Sandra Bullock மற்றும் George Clooney
நடித்தது. வான்வெளியில் முழுவதுமாக நடக்கும் கதை. Dr.Ryan Stone-ஐப்
பொருத்தவரை இதுதான் முதல் முறை வான்வெளிக்கு செல்வது. ஆனால், Kowalsky
தனது கடைசிப் பயணத்தில் இருக்கிறார். செயலற்றுப் போன தங்களது கலம் ஒன்றை
ரஷ்யா வான் வெளியிலேயே வெடி வைத்து தகர்க்க, விண்வெளிக் கலத்தின் துகள்கள்
இவர்களது ஊர்தியையும் தாக்குகிறது. இவர்கள் இருவர்
மட்டுமே அச்சமயம் உயிர் பிழைத்தாலும், விரைவிலேயே கொவால்ஸ்கி தன்னைக்
கத்தரித்துக் கொண்டு, Ryan-ஐ உயிர் பிழைக்க வைக்கிறார். ஒரு சீன
விண்வெளிக் கலத்திற்கு மிதந்து வந்து சேரும் Ryan, இன்னும் Kowalsky
உயிரோடுதான் இருக்கிறார் என்ற hallucination காரணமாகவே இவரைப்
பார்ப்பதாகவும், அவர் தனக்கு என்ன செய்தால் பூமிக்கு திரும்பலாம் என்று
சொல்லிக் கொடுப்பதாகவும் நம்பி, கலத்தை தப்பும் தவறுமாக இயக்கி பூமிக்கு
வருகிறாள். இதற்கிடையில், படத்தின் ஆரம்ப காட்சிகளில், தங்களது கலத்தை
பழுது பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் இருவரும் தங்களது
வாழ்க்கையையும், அதில் சூழ்ந்து நிற்கும் மானுட துயரங்களையும் விசாரித்துக்
கொள்வதான தருணங்கள், மனுஷ வாழ்க்கை கொடுக்கும் துன்பங்களிருந்து, எவ்வளவு
தொலைவு சென்றாலும் தப்பிக்க முடியாது என்பதை புலப் படுத்துகிறது. இறப்பது
கூட அல்ல, நினைவுகளை அழித்துக் கொள்வதுதான் துயரங்களில் இருந்து தப்பிக்க
ஒரே வழி என்பதை உணர்த்துவதாக, Dr.Ryan தனக்கு ஆக்சிஜன் போதவில்லை என்றும்,
நினைவிழக்க இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அவளும்
அதைத்தான் விரும்புகிறாளோ என்ற சந்தேகமும் நமக்கு ஏற்படுகிறது.
பூமியில் வந்து விழுந்ததும் ஏரியின் தண்ணீர் பரப்பிலிருந்து கரைக்கு நீந்தி வரும் Ryan, குப்புற விழுந்து கிடக்கும் நிலையில், மண்ணை அள்ளி வாயருகே கொண்டு செல்கிறாள்.
மண்ணை இழந்து நின்றவர்களுக்குத்தானே அதன் வாசனையை முகர முடிகிறது!
பூமியில் வந்து விழுந்ததும் ஏரியின் தண்ணீர் பரப்பிலிருந்து கரைக்கு நீந்தி வரும் Ryan, குப்புற விழுந்து கிடக்கும் நிலையில், மண்ணை அள்ளி வாயருகே கொண்டு செல்கிறாள்.
மண்ணை இழந்து நின்றவர்களுக்குத்தானே அதன் வாசனையை முகர முடிகிறது!
----
0 comments:
Post a Comment