ஏழு ஸ்வரங்கள்
நீங்கள் நல்ல எழுத்தாளராக விருப்பமா? இந்த ஏழு தன்மைகள் உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார்கள்.
ஒன்று: நல்ல எழுத்தாளர்கள் நிறைய படிக்கிறார்கள். படிப்பது மட்டுமல்ல, தாங்கள் படித்ததின் கட்டமைப்பு, நுணுக்கம், வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றை உற்று நோக்கி, அவைகள் அரிதானதாக இருப்பின், சுவீகரிக்கவும் செய்கிறார்கள்.
இரண்டு: நல்ல எழுத்தாளர்கள் வார்த்தைகளை சேகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பிடித்த வார்த்தைகளை சந்திக்க நேரின், அவைகளை கவனத்துடன் தன்வயப் படுத்துகிறார்கள். நேரம் வரும்பொழுது, அவைகளை தங்களுடைய எழுத்தில் பயன்படுத்துகிறார்கள்.
மூன்று: நல்ல எழுத்தாளர்கள் மொழி எந்த நிலையில், தருணத்தில் பயன்படுத்தப் பட்டாலும் அதை கவனிக்கிறார்கள். செவ்வியல் இலக்கியப் பிரதி, பேருந்து நிலையம், டாஸ்மாக் பார்கள், கல்யாண வீடுகளில் அரட்டி அடிக்கும் பெண்கள் என்று எங்கே மொழி - எழுத்திலும், பேச்சிலும் - பயன்படுத்தப் பட்டாலும் அதை கூர்த்த பிரக்ஞையுடன் கவனிக்கிறார்கள்.
நான்கு: நல்ல எழுத்தாளர்கள் ஒரு தரமான மொழிக் கையேடை பெரிதும் நம்புகிறார்கள். கற்பனையாகவும், கூர்மையாகவும் எழுதுவது என்பது வேறு; இலக்கணத் தவறில்லாமல் எழுதுவது என்பது வேறு. தமிழைப் பொருத்தவரை, மைசூரில் உள்ள மைய அரசு அமைப்பான 'இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம்' மொழி நடைக் கையேடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தரமானது. வேறு பதிப்பாளர்களும் வெளியிட்டிருக்கலாம். ஒன்றைப் பின்பற்றுவது நல்லது.
ஐந்து: நல்ல எழுத்தாளர்கள் காத்திருக்கிறார்கள். சில சமயம் எழுதுவதற்கு எதுவுமே இல்லாதது போல தோன்றுவது இயற்கை. எழுதும் அனைவருக்கும் இது அவ்வப்போது நேர்கிறது. ஒன்றுமே தோன்றாவிட்டால் காத்திருக்கவும். ஆங்கிலத்தில் இதை writer's block என்று அழைக்கிறார்கள். இம்மாதிரியான சமயங்களில், கொஞ்சம் இடைவெளி விடலாம்; வேறு எங்கேயாவது போய் எழுத முயற்சிக்கலாம்; அல்லது, எழுதாமலேயே இருக்கலாம்.
ஆறு: நல்ல எழுத்தாளர்கள் பிறர் சொல்லும் அபிப்பிராயங்களுக்கு அவைகளுக்குரிய மதிப்பைக் கொடுக்கிறார்கள். உங்களது எழுத்தைப் படித்த பிறகு, அடுத்தவர் முன் வைக்கும் விமர்சனங்களை ஏற்காத போக்கு, திறக்க மறுக்கும் கதவுகளையே நினைவு படுத்தும். பிறர் சொல்வதை கேட்பது என்பது, மிகவும் கடினம். பல வருடங்கள் பயிற்சிக்குப் பின்பே ஆகக் கூடுவது.
ஏழு: நல்ல எழுத்தாளர்கள் சலிக்காமல் தொடர்ந்து முயற்சித்த வண்ணம் இருக்கிறார்கள். எளிமையாக எழுதுவது மிகக் கடினம் என்பதை அனுபவத்தால் அறிகிறார்கள். மக்கள் மொழியில் கருத்தைத் தெரிவிப்பது எல்லாமே ஜனரஞ்சகம் இல்லை என்பதை இவர்கள் அறிவார்கள். ஆங்கிலத்தில் எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது: 'If you can't explain it simply, you don't understand it well enough.'
வேறு ஏதாவது குணங்கள் / தன்மைகள் எழுத்தாளர்களுக்கு தேவையா? ஆமென்றால், சொல்லுங்கள் ராஜாவே!

----
20-01-2014
Communisto
Manifesto - மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை தமிழில் எஸ்.வி.ராஜதுரை அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டு
வெளிவந்துள்ளதாக தி ஹிந்து தமிழ் பதிப்பில் இன்று செய்தி. எஸ்வி அவர்களின்
கருத்துக்கள் கொண்ட பெரிய, அரைப்பக்க செய்தி. ஏற்கனவே தமிழில் நிறைய பேர்
செய்த முயற்சிதான் என்றாலும், சோவியத் - கம்யூனிஸ்ட் வெளியீடுகள் நல்ல
தரமான பேப்பரில், படிக்கவே முடியாத தமிழில் வெளிவருபவை.
எஸ்வி ராஜதுரை அவர்கள் வ.கீதாவுடன் சேர்ந்து ஆக்கிய, மொழிபெயப்புகள்
உட்பட, படைப்புக்கள் மிகவும் தரமானவை. சொல்ல வந்ததை சமரசம் இன்றி, பெரும்
ஆய்வின் விளைவாக கனிந்த கருத்துக்களாக சொல்பவர்கள். ராஜதுரையின் தமிழ்
அக்கினி போன்றது. நம்பவே முடியாதவாறு சொல்வளம் கொண்டவர். அவைகளை பிரயோகப்
படுத்தும் முறை எழுதும் ஒவ்வொருவரும் பின்பற்றத் தகுந்தது. இடதுசாரி,
பெரியாரிச சிந்தனைகளில் தன்னை வளர்த்துக் கொண்டவர். இப்படிப்பட்டவர்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்திருப்பது மிகப் பொருத்தம்.
சீக்கிரம் படிக்க வேண்டும்!
----
0 comments:
Post a Comment