நீயா, நானா?

| Thursday, January 16, 2014
விட்டு விலகிய பிறகுதான் உறவுகள் தம்மை நமக்குத் தெரிவிக்கின்றனகூட இருக்கின்ற பொழுது இருப்பைக் கூட சட்டை செய்யாத நாம், விலகிய பிறகு அவைகள் நம்மை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருந்தன என்று அறிய வரும் தருணம் இயலாமையால் நிரம்பியதுவிலகுவதே தமது இருப்பை உணர்த்தத்தானோ என்னவோபிரிவதும் சந்திப்பதுமான இந்த வாழ்வில் யாருமே நிரந்தரமான நண்பர்களோ எதிரிகளோ இல்லைசில சமயம் நமக்கு வேண்டாதவர்களுக்காக கூட ஆலயங்களில் தொழுதபடி நிற்கிறோமே, இதுதான் மனிதம் தெய்வமைக்கு அருகாமையில் வரும் நேரமாநம்மைக் காயப்படுத்த முடிந்த நிலையிலும், அதைத் தவிர்த்து, மௌனமாக விலகிக் கொண்டேயிருக்கும் உறவுகள், நம்மின் தூக்கத்தை நிரந்தரமாக கெடுத்து விட்ட பேரிரைச்சல்கள், இல்லையா?

Kramer Vs. Kramer என்ற படம் 1979-ல் வந்ததுஐந்து ஆஸ்கார் விருதுகளை அள்ளிய படம்.  Dustin Hoffman, Meryl Streep ஆகியோர் நடித்தது.  Ted Kramer விளம்பர நிறுவனமொன்றின் பெரிய அதிகாரிஅலுவலகப் பணிகளில் தன்னை மறந்து ஈடுபட்டதால், மண வாழ்க்கை கேள்விக்குறியாகிறதுகணவனின் தொடர்ந்த உதாசீனத்தால் ஆற்றவே முடியாதபடி காயமுற்ற Joanna Kramer படம் தொடங்கும் முதல் காட்சியில் கணவனையும் மகனையும் [Billy Kramer] விட்டு வெளியேறுகிறாள், தன்னைக் கண்டெடுக்க  இப்படி ஒரு முடிவை Joanna எடுத்திருக்கிறாள் என்பதையே நம்ப முதலில் மறுக்கும் Ted, இவ்வளவு அதிகம் சம்பாதிக்கும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையுமாக இருக்கும் தன்னை உதறும் எண்ணம் தன் மனைவிக்கு வந்திருப்பதை, அசட்டுத்தனம் என்று எண்ணி, இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவாள் என தன்னை ஆற்றுப்படுத்துகிறான். தனது வாழ்வெங்கிலும் புறக்கணிப்பால் சூழ்ந்துவிட்ட வெறுமையைக் களையவும், இழந்துவிட்ட தன்னைக் கண்டெடுக்கும் முயற்சியிலுமே தான் மிகவும் நேசிக்கும் மகனை விட்டுப் பிரிகிறாள் Joanna.  புறக்கணிப்பு எவ்வளவு கொடுமையான விடயம் என்று எல்லோரும் புரிந்து கொள்ள முடியும்தானே!

குடும்பத் தோழியான Margaret மூலம், தன் மனைவியின் விலகலுக்கான காரணத்தை அறியவரும் Ted, தான் வேலையில் மூழ்கி இருந்தது எப்படி இதற்கு காரணமாக முடியும் என்று குழம்பியபடியே, மகனுக்கு தாயாகவும் தந்தையாகவும் மாற முதல் முயற்சிகளை தொடங்குகிறான்சமையல் அறையிலிருந்து தொடங்கி, படுக்கை அறை வரை தனக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கும் தனது ஏழு வயது மகனின் மூலமாகத்தான், தனது வாழ்க்கைக்கான  ஒட்டுமொத்த அர்த்தத்தை கண்டுணர்கிறான் Ted.  மனைவி பிரிந்த முதல் நாள், சமைக்கத் தொடங்கி, செய்யும் சிற்றுண்டி சாப்பிட முடியாததாகப்போய், அடுப்பிலிருந்து கீழே விழுந்த சூடான ரொட்டித் துண்டுகளால் கையைச் சுட்டுக்கொண்டு, இயலாமையால் மனைவியைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, தனது 'தந்தைமையை' துவக்கும் Ted, பின்னொரு காட்சியில், ஒரு பெரிய சமையல் விற்பன்னரே போன்று லாகவமாக சமைத்துக் கொண்டிருப்பதைக் காணும் போது, வாழ்க்கை தனக்குக் கற்றுக் கொடுக்கும் பாடத்தில் தேறிவிட்டான் என்று புரிந்து கொள்கிறோம்.

Ted மகனிடம் பொய் பேசுவதில்லைஅவன் முன் தனது மனைவியைத் திட்டுவதில்லைஒரு படி மேலே போய், "அம்மா வீட்டை விட்டு போனதற்கு, நீ நினைத்துக் கொண்டிருப்பதைப் போலநீ காரணமல்லஎன்னால்தான் அவள் வீட்டை விட்டு போய் விட்டாள்" என்று சொல்லும் Ted, தன்னைக் கண்டுபிடித்தவிட்ட நிலையில் நிற்கிறான். மகனை விளையாடக் கூட்டிச் சென்ற ஒரு நாளில், மோசமான விபத்தொன்றால் முகம் கிழிந்து போக, அவனை அள்ளிக்கொண்டு ஓடும் நிமிடங்களில், Billy உலகிலேயே சிறந்த ஒரு அப்பாவைப்  பெற்று விடுகிறான்

பதினெட்டு மாதங்கள் கழித்து, இவர்களின் வாழ்வில் மீண்டும் புகுந்து இடைமறிக்கிறாள் Joanna.  தன்னைக் 'கண்டுபிடித்து' விட்டதாகவும், இனிமேல் நியூயார்க் நகரிலேயே வாழ இருப்பதாகவும், தன்னிடம்தான் Billy இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுகும் Joanna-வை எதிர்த்து வழக்காட முடிவெடுக்கிறான் Ted.   வழக்கு நடக்கும் நிலையிலோ, ஏன் அதற்கு முன்னரோ கூட, Joanna-வை இழித்துப் பேசுவதோ, அப்படி நினைப்பதோ இல்லை என்ற உண்மையில், இந்த நவீன வாழ்க்கை முறை நம்மில் எத்தனை பேரை சீரழித்து சின்னா பின்னமாக்கியிருக்கிறது என்ற கோபம் அருகிலிருக்கும் எதையாவது எடுத்து உடைக்கத் தூண்டுகிறதுநீதிமன்றத்தில் உடைந்த குரலில் Ted சொல்கிறான்: "பெண்ணென்ற ஒரே காரணத்தாலேயே ஒருத்தி சிறந்த தாயாக இருக்க முடியும் என்று எப்படி நம்புவது?"(I don't see why a woman is a better parent simply because of her sex.)  ஆனால், நீதிமன்றம் சட்டப் புத்தகங்களால் ஆன கண்ணாடிகளையே மாட்டிக்கொண்டு, மானுடச் சிக்கல்களை அணுகுகிறது.  Billy-யின் வயதை அடிப்படையாகக் கொண்டும், தாயிடம்தான் சிறு குழந்தை நல்ல முறையில் வளர முடியும் என்பதான சட்டப் பரிந்துரைகள் ஏற்கனவே இருப்பதாலும், Joanna-விடம் Billy- ஒப்படைத்துவிடும்படி தீர்ப்பாகிவிடுகிறது.

படத்தின் பாத்திரங்கள் அனைவருமே தங்களுக்கு நேரும் சம்பவங்களின் வழியே, தம்மைப் புரிந்து கொள்கிறார்கள்.   ஏழு வயது Billy-யையும் சேர்த்துதாயின் அரவணைப்புக்காக ஏங்கும் Billy, தன்னை வளர்க்க கடந்த பதினெட்டு மாதங்களாக தந்தை எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்கிறான். அவனுக்கு அப்பாவும் அம்மாவும் இந்த வீட்டிலேயே, அவனுடைய படுக்கை அறையிலேயே கிடைக்க வேண்டும்பாவம், Billy குழந்தைதானே!

கடைசிக் காட்சி மிகவும் சிறப்பானது.  Billy-ன் உடைகள் அடுக்கப்பட்டு பெட்டியில் தயாராக இருக்கும் சமயம், அப்பாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், நிறுத்தவே முடியாமல் முகம் வீங்கும்படி அழுத வண்ணமே இருக்கும் Billy-யைப் பார்க்கிறோம். Billy-யை விட்டு எப்படி பிரிந்திருக்கப் போகிறோம் என்ற கவலையில் இருக்கையில் முழுகிவிட்ட Ted, திடீரென்று ஒலிக்கும் தொலைபேசியை எடுக்கிறான்.  "குழந்தையை வாங்கிப் போக வந்திருக்கிறேன்அதற்கு முன் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்கீழே வர முடியுமா?" என்று Joanna அழைக்க இறங்கி வரும் Ted, சட்டத்திற்கு அடிமையாய், குழந்தைக்காக தவிப்பவனாய், சூழ்நிலைக் கைதியாய், நிராயுதபாணியாக முன்னாள் மனைவி முன்பாக நிற்கிறான்.

அவனிடம் Joanna சொல்கிறாள்: "நான் என் மகனை வீட்டிற்கு கூட்டிப் போக வந்தேன்ஆனால், அவனது வீடு இங்கேதான் என்று புரிகிறதுவீட்டிலிருந்து வெளியேறுவது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?  Billy உன்னிடமே இருக்கட்டும்இதைப் புரிய வைத்ததற்கு நன்றி."

கடவுளே, மனிதர்கள் ஏன் இவ்வளவு நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள்?

இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று, இதுவரை பார்த்திரா விட்டால், உங்களை நான் கட்டாயப் படுத்துகிறேன்.

0 comments:

Post a Comment