சிபாரிசுக்காரர்

| Thursday, December 13, 2018
சிபாரிசுக்காரர்
“காற்றில் கலந்த பேரோசை” – சுந்தர ராமசாமி பல தசாப்தங்களுக்கு முன்பு வெளிக்கொண்டு வந்த கட்டுரைத் தொகுப்பு. இன்று படிக்கும் பொழுதும் புதியதாகவும் புரட்சியாகவும் இருக்கிறது. இன்று காலையில் அந்தப் புத்தகத்தில் க.நா.சு. அவர்களைப் பற்றிய கட்டுரையைப் படிக்க வாய்த்தது. முடித்தவுடன் ரொம்பவும் பெருமையாக உணர்ந்தேன். மனுசப் பயலாக இருப்பதால்தானே இத்தகைய விடயங்களைப் படித்து ரசிப்பது மட்டுமல்லாமல், நம்முடைய தகுதியையும் கொஞ்சம் உயர்த்திக் கொள்ள முடிகிறது! ஒருமுறை நண்பரான தமிழாசிரியர் ஒருவர் தங்களுடைய பணியிடைப் பயிற்சியில் வந்து பேசுமாறு அழைக்க, அந்த கூட்டத்தில் நான் படித்திருக்கக்கூடிய புத்தகங்களைப் பற்றியும், விருப்பமான எழுத்தாளர்களைப் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தேன். முடித்தவுடன் இரண்டு தமிழாசிரியர்கள் நான் அச்சம் கொள்ள தேவையான முறைப்புடன் அணுகி, கல்கியை எப்படி நான் விட்டுவிடப் போச்சு என்பதாக பிடித்துக் கொண்டார்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நழுவி விட்டேன். மன்னிப்புக் கேட்டதால் மட்டுமே அங்கிருந்து உயிரோடு நகர முடிந்தது. ஒரு கொலைக்கான முஸ்தீபுகள் அவர்களிடம் இருந்தது.
என்னுடைய சந்தோசம் என்னவென்றால் சுந்தர ராமசாமி அவர்களும் கல்கியைப் பெரிதாக உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதே. அதைவிட சந்தோஷம் க.நா.சு. அவர்களுமே கல்கியை பாரதூரமான இலக்கிய கர்த்தாவாக பார்த்திருக்கவில்லை என்பது. உண்மையில் கல்கி அவர்களின் தலையணை சரித்திர நாவல்களைப் படிக்க பலமுறை முயன்று தோற்றிருக்கிறேன். படித்த பக்கங்களிலிருந்து எந்த விதமான உணர்வெழுச்சியையும் பெற்றதில்லை. எந்த மனச் சித்திரங்களும் உருவானதில்லை. ஆனால் சாண்டியன் இந்த விதமான சித்திரங்களை ஆயிரக்கணக்கில் என்னுள் சிருக்ஷ்டித்துக் காட்டியிருக்கிறார். சாண்டில்யன் இப்போது பொது வாசக நினைவுப் பரப்பிலிருந்து காணாமல் போய் விட்டார். ஆனால் கல்கி அவர்களைப் பற்றி தூஷணையாக ஒரு வார்த்தை பேசியோ எழுதியோ விட்டால் போதும், ஹெச்.ராஜா கணக்கில் நூறு பேரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டி வரும். இதை எழுதியிருக்கிறேன்; என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
ஆனால், க.நா.சு. அவர்கள் அந்தக் காலத்திலேயே பயந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமானது. கல்கியை தனது சிபாரிசுப் பட்டியல் எதிலும் அவர் கொண்டுவரவில்லை. அவரது பட்டியல் அடிக்கடி மாறிவந்திருக்கிறது என்றாலுமே கூட, எந்தப் பட்டியலிலும் கல்கி அவர்களுக்கு இடமில்லை. கல்கி ஒரு கடவுளர் என்ற நிலையை பத்திராதிபதிகள் – மந்திரிகள் – முதல் தலைமுறை வாசகர்கள் ஆகியோரின் ஆதரவுடன் வந்தடைந்திருந்தார். இருப்பினும், க.நா.சு. பட்டியலில் இடமில்லாமல் வெளியே தாழ்வாரத்தில்தான் கல்கி உட்கார வேண்டியிருந்தது.
இதெல்லாம் இருக்கட்டும். க.நா.சு. அவர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதும் சுந்தர ராமசாமி, வாசக நிலையில் க.நா.சு. அனுபவித்திருக்கக் கூடிய மன எழுச்சிகளைப் பற்றி விவரிக்கிறார். இலக்கிய விமரிசனத்திற்கு சில மேற்கத்திய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, தர நிர்ணயங்களை ஏற்படுத்தி அவைகளின் மேலாக படைப்புகளை விமரிசித்து வந்தவர்கள், பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தன் உட்பட, ஒரு தேர்ந்த வாசகனின் மன எழுச்சிக்கு எந்த வித முக்கியத்துவத்தையும் தரவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். ஒரு பெரும் கலைப்படைப்பு ஏற்படுத்தும் மன ஆவேசத்திற்கு இணையானதாக எந்த ஒரு கோட்பாட்டு அளவுகோலையும் சொல்லிவிட முடியாது என்று வாதிடும் சுந்தர ராமசாமி, க.நா.சு. அவர்கள் இந்த மன ஆவேசத்தை மையப்படுத்தியே தன்னுடைய சிபாரிசுகளை முன்னிலைப்படுத்தினார் என்று சொல்கிறார்.
தமிழில் சிரத்தையுடன் வாசிக்க விருப்பம் கொண்டிருப்போர் இந்தக் கட்டுரையை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.

--------

NO FAN AND NO RAINS...

Watched "12 Angry Men" recently. The entire course of the film is made of only three scenes. In the first is presented a courtroom where a young man is accused of having stabbed his own father in drunken stupor. In the second scene, all the twelve members of jury assemble in the small room adjacent to the courthall and they want an unanimous decision to be conveyed to the judge who will decide the nature and length of the sentence. Except one, the other eleven members of the jury are convinced about the culpability of the accused. But, the twelfth member of the jury feels otherwise. He tells others to ponder over all the possibilities. He feels that the boy should not be convicted unless crime allegedly committed by him is proved beyond reasonable doubt. None in the jury accepts him in the beginning and a very heated debate ensues among the jury members. With sheer power of arguments and cool temper, the twelfth man in the jury wins over the hearts of other members, of course, one by one. When it is put to vote for the last time, all the twelve members of the jury are unanimous in their decision: the accused boy could be innocent, after all.
The third scene merely completes the formalities of this power-charged drama. The jury member who felt from the beginning that the boy could be innocent is greeted by one other member.
During the entire course of the drama, there is never a dull moment. Figurative elements are brilliantly employed by the director. As the debate hots up, the only fan in the room stops working - adding fuel to the fire. As the twelfth member starts winning over the others' hearts, it starts raining.
This black&white classic is irresistible and should tell the viewer what great filmmaking is all about. The film is downloaded very easily from a number of online sources.

0 comments:

Post a Comment