கறுப்பு நாயும் நீலப் படமும்

| Thursday, December 13, 2018
கறுப்பு நாயும் நீலப் படமும்
பரியேறும் பெருமாள் படத்தைப் பற்றி நிறைய பேர் எழுதியாகி விட்டது. படத்தில் நீலம் இருப்பது பற்றி குறையாகவும் நிறையாகவும் சொல்லியிருக்கிறார்கள். நல்லதுதான். தன்னுடைய வாழ்க்கையில் பரியேறும் பெருமாள் கடும் எதிர்வினை எதையும் ஆற்றுவதில்லை. அவனுக்குத் தன்னுடைய இன்றைய நிலையும் சமுதாயத்தின் பார்வையும் தெரிந்திருக்கிறது. அதை எப்படி மாற்றுவது என்பதையும் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. படிப்பான். வக்கீலாக வருவான். தன்னை அடித்தவர்களின் கணக்கைத் தீர்ப்பான்.
படத்தின் script முக்கியமானது. எந்த வித கதாநாயகத் தனமும் அகற்றப்பட்ட விதத்திலேயே ஒரு கதாநாயகத் தனம் உருவாகியிருக்கிறது. நிஜமாக இருப்பதுவே கதாநாயகத் தனந்தான். இன்னொரு அளவில், அவரவர் கதைக்கு அவரவர்களே நாயகர்களும் நாயகிகளும். அசட்டுத் தனமான காதல் காட்சிகளும், கனவுப் பாட்டுக்களும் படத்தின் மையத்தை கடாசியிருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. முதல் காட்சியிலிருந்து கடைசி பிரேம் வரை வில்லிலிருந்து பாயும் அம்பு மாதிரி பறக்கிறது.
எந்தக் காட்சியையும் எடுக்க முடியாது. ரொம்பவும் இறுக்கமாக படம் பின்னப்பட்டிருக்கிறது. படத்தின் நிலவியல் பின்னணி தத்ரூபமாக காமிராவில் வந்திருக்கிறது. சாதிய மொழியும், கலாச்சாரமும் எதார்த்தமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. படத்தில் subtle texts, sub-texts ஏராளம். புளியங்குளத்து பையன் என்று தெரிந்ததும் பெரியவர் பையனை உட்காரச் சொல்லிவிட்டு கால் இருத்திருப்பதாக சொல்லி நின்று கொள்கிறார். சாதிக்காக செய்யும் கொலைகளை குலசாமிக்கு படைக்கும் புண்ணிய காரியமாக பார்க்கும் அந்தப் பெரியவர் சனாதனத்தின் கொடூர முகத்தின் நாம் காணும் வடிவம்.
படத்தின் கடைசி காட்சி கொஞ்சம் நாடகத் தனம் கொண்டதுதான். ஆனால், வாழ்க்கையிலும் நாடகத்தின் பங்கு இல்லையா என்ன?
பின் குறிப்பு: சந்தோஷ் நாராயணன் ஒரே மாதிரியாக ஒலிப்பதை மாற்றிக் கொள்வது அவருடைய பணிவாழ்விற்கும் கேட்பவரின் காதுகளுக்கும் நல்லது. இந்த பத்தி பரியேறும் பெருமாள் படத்தைப் பற்றிய ஒரு scholarly write-up கிடையாது. படத்தைப் பார்த்ததும் தோன்றியதை மறப்பதற்குள் தாளில் கொண்டுவந்தது தவிர வேறில்லை.

--------

FOREIGN MEDICAL GRADUATE EXAMINATION

🍁 The Times of India dated 25 October 2018, Chennai Edition carries an important news item on FMGE (Foreign Medical Graduate Examination).
🍁 Indian students who aspire to have a medical degree outside India generally go to China, Russia, Ukraine, Georgia, Philippines and Malaysia.
🍁 Approximate cost of accomplishing a medical degree in these countries is between 20 and 30 lakhs whereas an Indian medical degree in private medical colleges deprives the aspirant of 1 to 1.5 crores of rupees.
🍁 Indian students who accomplish their medical degree in USA, UK, Australia and New Zealand are exempted from appearing in FMGE.
🍁 FMGE is conducted twice every year.
🍁 Question paper is of objective type with a total of 400 questions. No negative marking.
🍁 Students who score 50% and above are declared cleared.
🍁 An approximate of 55000 students appear each time of which only around 3000 clear the exam.
🍁 Students who complete their medical degree in India need not appear in these examinations.
🍁 An Indian who finished his medical graduate degree elsewhere can appear any number of times in FMGE.
🍁 News stories about some students who could not clear FMGE despite many attempts have been reported.
🍁 A young man from Tiruppur runs medical equipments venture after failing in FMGE six times. He says that he had given up the idea of appearing in examination again.
🍁 There are hospitals in India who hire these unsuccessful candidates at FMGE against the laws.
🍁 These foreign medical graduates are paid barest minimum amounts as monthly remuneration.
🍁 There are discussions at highest level to do away with this examination.
🍁 There is a line of thought that this examination should be made mandatory to Indian medical graduates as well.
🍁 An approximate of 70000 medical graduates get into job market every year in India when the requirement is many times more than that.
🍁 Cold climactic conditions prevailing in countries where Indian students undergo medical degrees are attributed to be the main reason why these students find FMGE question paper very difficult.
🍁 Certain diseases peculiar to Indian tropical conditions are not included in the medical curriculum of many foreign universities.
🍁 The standard of FMGE question papers is extremely high from any perspective. It is said that even most of the students who accomplish medical degrees in India cannot clear FMGE.
🍁 Issues related to FMGE are often reported over print and electronic media these days and it is high time the issue got addressed by those who matter.

0 comments:

Post a Comment