கடைசி ராணி
-ராபர்ட் பிரௌனிங்
தமிழில்: கோபி ரவிக்குமார்
நெடுங் கதவத் தாழ் திறந்து
கலைக் கூடம் காண வந்த
தூதுவா... வா
கலைக் கூடம் காண வந்த
தூதுவா... வா
நினைவுக் கல்லறையில்
சில ஞாபகப் சிதறல்கள்..
அந்தப்புர போர்க்களத்தில்
சில ரகசிய சம்பவங்ககள்.
சில ஞாபகப் சிதறல்கள்..
அந்தப்புர போர்க்களத்தில்
சில ரகசிய சம்பவங்ககள்.
இங்கே ஓரோவியம் பார்.
அவள் தான் என் முதல் ராணி
காம உலைக்கலத்தில்
கொதிக்கும் பேரழகு.
அவள் எச்சில் அமுதமாம்
நான் பிச்சைக்காரணாம்
மயக்கத்தில் பிதற்றினாள்
மரணத்தைக் காட்டிவிட்டேன்
அவள் தான் என் முதல் ராணி
காம உலைக்கலத்தில்
கொதிக்கும் பேரழகு.
அவள் எச்சில் அமுதமாம்
நான் பிச்சைக்காரணாம்
மயக்கத்தில் பிதற்றினாள்
மரணத்தைக் காட்டிவிட்டேன்
அங்கே ஓரொவியம் பார்
அடுத்து வந்த ஆயிழைதான்
அவள் விழியின் கவிதைகள் பார்
இமைக்காத வேளையிலும்
இமைக் கால்கள் ஈட்டியைப் பார்.
முயக்கத்தில் முறுவலித்து
ஊடல் கலை உச்சமென்றாள்
உதறி மறுதலித்தாள்
உடனே கொன்று விட்டேன்.
இனக் கவர்ச்சித் தேட்டத்தில்
இங்கொன்றும் அங்கொன்றும்
சிதறிப் போன சித்திரங்ககள்.
எல்லோரும் அணங்குகள் தான்
அழகு நிறை அரம்பையர் தான்
அவர்களையும் ஏன் கொன்றேன். காரணங்கள்
சொல்லத்தான் வேண்டுமெனில்
சொல்லுகிறேன் கேட்டுக் கொள்.
கொல்லும் போதெல்லாம்
உள்ளூறும் ஒரு தித்திப்பு.
இங்கொன்றும் அங்கொன்றும்
சிதறிப் போன சித்திரங்ககள்.
எல்லோரும் அணங்குகள் தான்
அழகு நிறை அரம்பையர் தான்
அவர்களையும் ஏன் கொன்றேன். காரணங்கள்
சொல்லத்தான் வேண்டுமெனில்
சொல்லுகிறேன் கேட்டுக் கொள்.
கொல்லும் போதெல்லாம்
உள்ளூறும் ஒரு தித்திப்பு.
எட்டெண்று இலக்கமிட்ட
இந்த ஓரோவியம் பார்
சட்டென்று உன் இதயம்
துடிக்காமல் நிற்கும் பார்.
நிலவின் ஒளித்திரியில்
எரியும் இரவுகளில்
அவன் வரைந்த ஓவியம் பார்
அது என் கடைசி ராணி...
அவளென்னை மறுக்கவில்லை
மனம் வெதும்பி வெறுக்கவில்லை
ஆனாலும் கொன்றேன் ஏன்...?
மூளைக்குள் முளைவிடும்
சந்தேகத் தாவரம் ஆலமரம்.
மீண்டும் அவள் வதனம் பார்.
அழகு அவளில் அடைக்கலம் ஆவதைப் பார்
அலைபாயும் கூந்தல்.
நுதல் வெளியில் வியர்வை.
விழிமொழியும் கவிதை
கன்னக் கதுப்பில்
சுழிந்த குழி.
இளஞ்சிவப்பில் அதரம்
மெது மெதுவாய் அதிரும்
அழகு அவளில் அடைக்கலம் ஆவதைப் பார்
அலைபாயும் கூந்தல்.
நுதல் வெளியில் வியர்வை.
விழிமொழியும் கவிதை
கன்னக் கதுப்பில்
சுழிந்த குழி.
இளஞ்சிவப்பில் அதரம்
மெது மெதுவாய் அதிரும்
ஆனாலும்...ஆனாலும்... ஆனாலும்
அவளுடைய அந்த வெட்கம்.
மஞ்சள் முகமதிலே
வெட்கத்தால் விளைந்த
சிவப்பின் பரிமாணம்.
அது எனக்கு அவமானம்.
ஆண்மையின் அடையாளம்
என்கை உடைவாளா அல்லது
அவன் கைத் தூரிகையா...?
அவளுடைய அந்த வெட்கம்.
மஞ்சள் முகமதிலே
வெட்கத்தால் விளைந்த
சிவப்பின் பரிமாணம்.
அது எனக்கு அவமானம்.
ஆண்மையின் அடையாளம்
என்கை உடைவாளா அல்லது
அவன் கைத் தூரிகையா...?
நிறங்களின் திறம் என்பார்.
தூரிகைக் கைத்துடிப்பென்பார்
அந்த ஓவியப் பிரம்மவின்
உச்சப் படைப்பென்பார்.
இல்லை, இல்லை, இல்லவே இல்லை
அவன் வண்ணம் குழைக்கையிலே
இவள் எண்ணம் குலைந்து விட்டாள்.
குலைந்த அவளை
குலைத்த இவன்
ஓவியத்தில் தீட்டி வைத்தான்.
குலைத்ததற்கும் குலைந்ததற்கும்
மரணத்தைப் பரிசளித்தேன்.
தூரிகைக் கைத்துடிப்பென்பார்
அந்த ஓவியப் பிரம்மவின்
உச்சப் படைப்பென்பார்.
இல்லை, இல்லை, இல்லவே இல்லை
அவன் வண்ணம் குழைக்கையிலே
இவள் எண்ணம் குலைந்து விட்டாள்.
குலைந்த அவளை
குலைத்த இவன்
ஓவியத்தில் தீட்டி வைத்தான்.
குலைத்ததற்கும் குலைந்ததற்கும்
மரணத்தைப் பரிசளித்தேன்.
(A transcreation of the poem “My Last Duchess” by Robert Browning )
0 comments:
Post a Comment