வளமிகு காடுகள் வாவென அழைக்கும்

| Sunday, December 15, 2013
மொழி பெயர்ப்பு என்பது எப்போதுமே கல்லிலிருந்து நார் உரிப்பதுபோலத்தான். நிறைய சங்கடங்கள் உண்டு. மனிதர்களைப்போலவே மொழிகளுக்கும் உயிரும், தனித்த குணமும் உள்ளன. Source Language-ல் இருந்து Target Language-க்கு பிரதியை மொழி மாற்றம் செய்யும்பொழுது பல்வேறு சிக்கல்கள். ஒரு சட்டப் பிரதியை மொழி பெயர்ப்பு செய்வதற்கும் இலக்கிய பிரதி ஒன்றினை மொழி பெயர்ப்பு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இரண்டு மொழிகளிலும் cultural qualities பொருந்திப் போகுமானால் கொஞ்சம் சுலபம். மொழிபெயப்பாளரின் bilingual ability மற்றும் சம்மந்தப்பட்ட இரண்டு மொழிகளுக்கிடையே socio-cultural compatibility பொறுத்து மொழி பெயர்ப்பின் வெற்றி உள்ளது. சற்று தகுதியான நிலையில், கைகளில், இலக்கிய மொழி பெயர்ப்பை பொருத்தமட்டில் translation என்பது transcreation-ஆக மாறுகிறது. கீழே அமெரிக்க கவி Robert Frost-ன் ஆகச் சிறந்த கவிதை ஒன்றினை தமிழில் தொ.மு.சி.இரகுநாதன் transcreation செய்திருப்பதை பாருங்கள்.
...........
"The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep."
(Stopping by Woods On a Snowy Evening by Robert Frost)

..........
"வளமிகு காடுகள் வாவென அழைக்கும்,
ஆயினும் எனக்கோர் ஆயிரம் கடமைகள்;
தொலைவோ பலகல் நடந்திட வேண்டும்,
துயில் கொளுமுன்பு முடித்திட வேண்டும்."
(தொ.மு.சி.இரகுநாதன்)

0 comments:

Post a Comment