LAGGIES - a recent
movie about young Americans whose lives are more complicated than anyone of us
can imagine. Family setup has been completely shattered. A considerable number
of young Americans are single parented. Parents are too busy to worry about how
their offspring shapes up. Every man is judged by the material success he
manages to attain. One Night Stands have already become the order of the day.
A teenager is left
all alone in the world. Her gang only makes it
worse. It is natural that she got to seek her solace in substances of various
kinds and intensity. As things go so pathetically, she chances upon a lady in
her late twenties who slowly gets involved into her personal life. A sort of
love relationship is formed between the lady (Keira Knightley) and the
teenager's father, though the lady is already engaged to one of her friends.
The narrative slowly
resolves all these issues. The man who is about to marry the lady comes to
understand that he had lost her, for good. In fact, the lady was never truly in
it. On her part, the lady comes to understand that she could find in the
teenager's daddy the man she has been searching for all these years. In this
lady, the teenager finds a mother she did not have but wanted to have - a
friend as well as a mother. In the teenager, the lady could find her friend and
probably, a daughter she wants to have, if things roll out in the fashion that
she desires.
Members of many
disintegrated families chance to meet one another and they are tightly fastened
by wires of circumstances. Looking dramatically, an assent is formed of many
dissents. Always, harmony is formed by parts. In fact, it is the part that
makes the whole what it is.
America - as a
nation - is a superpower, no doubt. Americans - as a people - are astray and
gone disintegrated into inconsolable individuals. But, they could find their
last hope in the fact that only parts could be assembled into a whole. They
perhaps undergo a period of transition. They should lose whatever little hope
is left within them about one another. They, as a people, need to be
disillusioned completely. Then, in the utter annihilation of the institution
called 'family', they will regroup themselves in probably a nobler setup than
the so-called 'family'.
LAGGIES is an
interesting movie for so many reasons, for Indians too.
-----
தெய்வத்திருமகள்?
இரண்டு படங்களை
அண்மையில் மறுபடியும் பார்த்தேன். Cinderella Man மற்றும் I am Sam.
James Braddock என்ற
குத்துச் சண்டை வீரனின் உண்மைக் கதைதான் முதலில் குறிப்பிட்ட படம்.
முதல் உலகப் போருக்கு
பிந்தைய வருடங்களில் மேற்குலகம் பெரும் பொருளாதார மந்த நிலையில்
பீடித்திருந்த பொழுது, துயரடையாதவர்கள் சமூகத்தில்
மிகச் சிலரே. Braddock குத்துச்
சண்டை அமைப்பால் வெளியேற்றப்பட்ட நாட்களில் வாழ்வின் அடிப்படை அம்சங்களுக்கே
சிரமப்பட்டு ஜீவனம்
நடத்துகிறான். இந்த நாட்களில் அவனையும் குழந்தைகளையும் காத்து நிற்பது அவனது மனைவியே. அவனது மனைவிக்கும் அவனுக்கும் இடையேயான காதல் வாழ்க்கையை காட்சிப் படுத்தியிருக்கும்
விதம் பார்ப்பவனின் இதயத்தை ஏதோ செய்கிறது.
Russell Crowe மற்றும் Renee Zellweger இருவரின்
கலையுலகப் பயணத்திலும் மைல்கல்லான படம் இது
என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
Braddock உலகச் சாம்பியன்
ஆவதும் அதன் காரணமாய் அமையும் அவனது மனைவியும் குழந்தைகளும், குடும்பம் என்ற அமைப்பின் மீது புதிய
நம்பிக்கைகளைத் தருகிறார்கள். பார்க்காதவர்கள், Cinderella
Man-ஐ அவசியம்
பார்த்துவிடுங்கள்.
“The secret of creativity lies in one’s ability to hide its source” என்பதாக சொல்வார்கள். விக்ரம், அனுஷ்கா நடித்து 2011-ல் வெளிவந்த தெய்வத் திருமகள் என்ற
படம் I AM SAM என்ற
படத்தின் அப்பட்டமான காப்பி. (திருடிக்
கொண்டது என்று
சொல்வது தவறு என்றால் தழுவிக் கொண்டது என்று சொல்லிவிடலாம்).
தமிழ்ப் படங்களுக்கே
உரிய மசாலாக்கள் கலந்தரைத்து ஊற்றி பெரும் பிரதேச வாசனையுடன் மணக்க முனைந்த இந்தப் படத்தை
மூலத்துடன் ஒப்பிட்டால், ‘தெய்வத் திருமகள்’
சம்பந்தப்பட்ட
நபர்கள் ‘கலைஞர்கள்’
என்ற அடைமொழிக்கு தகுதியாவதற்கு
இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படுகிறது என்று உணர்ந்து பரிதாப்பட முடியும்.
மன நலம் வளராத ஒரு தகப்பனின்
பரிதாபத்தை, அப்படிப்பட்ட
ஒரு மனிதனின் இயல்பிலேயே Sean Penn உணத்துகிறார். படத்தில் கதாநாயகன்
பேசும் வசனங்கள் உளறல்கள் போலத் தெரிந்தாலும், உற்று நோக்கின், நாகரீக வாழ்வைப் பற்றி, மன முதிர்ச்சி உள்ளதாக தம்மை
நம்புவோரின் உலகத்தைப் பற்றிய அதிர்ச்சி தரும் பெரும் உண்மைகளே
அவை என்பது புரிகிறது. “ஒரு
நல்ல தகப்பனாக
இருப்பதற்கு அறிவு எதற்கு? அன்பு
மட்டும் போதாதா?” என்று
சாம் கேட்கும்
கேள்விக்கு, நம்
பிள்ளைகளுடன் பிணக்கு கொண்டு அவர்களோடு இடையுறாது மோதலில் சிக்குண்டு அவதியுறும் நம்மில்
பலர் என்ன பதிலை வைத்திருக்கிறோம்?
கிடைக்கும் நேரத்தை
எவ்வாறு பயன் மிகுந்து உபயோகப்படுத்துவது என்பதிலே குழப்பம் இருப்போர் இப்படியான
திரைப்படங்களை பார்த்து உய்யலாம்.
----
அசலும் நகலும்
நேற்று Russell
Crowe நடித்த இரண்டு
படங்களை எதேச்சையாக
பார்த்தேன். The Next Three Days மற்றும்
Robin Hood. முக பாவனைகள்,
அங்க அசைவுகள்,
ஏன் மொத்த உடல்மொழியும்
கூட தமிழ்த் திரைப்பட நடிகர் கமல ஹாசனுடயவைகளைப் போலவே
இருந்தது. முக்கியமாக,
மிக மெல்லிய உணர்வுகளை
முகத்தில் காண்பிக்க வேண்டிய தருணங்களில் எல்லாம் Russell Crowe, அந்தத் தருணங்களில், கமலஹாசன் எப்படி நடிப்பாரோ அப்படியே
செய்திருந்தார்.
இப்படியா கமலஹாசனை காப்பியடிப்பது?
கொஞ்சமாவது சொந்தமாக
தனது மனோராஜ்யத்தில் கற்பனை செய்து Russell Crowe நடிக்க வேண்டாம்? இது தெரிய வந்து, உலக நாயகன் அவர்கள் ஒரு வழக்கை சென்னை உயர்
நீதி மன்றத்தில் தாக்கீது செய்தால் Russell Crowe-ன் நிலைமை என்னவாகும்?
----
0 comments:
Post a Comment