பெரியாரைத்
துணைக்கொள்
பெரியாரை எதிர்க்கும் தமிழ்த்
தேசியங்கள் - என்ற காணொளி TouTube-ல் காணக்
கிடைக்கிறது. மிகவும்
முக்கியமானது. எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவு. ஏறக்குறைய ஒரு மணி நாற்பது நிமிடங்கள் நீளும்
இந்தக் காணொளி மிகவும் பிரமிப்பாகவும், மக்கள் மறந்துவிட்ட மாற்று வரலாறு, மாற்றுத்
தத்துவம், மாற்று அரசியல் பற்றி,
சொற்பொழிவு என்ற அளவில், மிகவும் விரிவாக பேசுகிறது.
தங்களுடைய ஓட்டு அரசியலுக்காக
பெரியாரை இன்று ஏசுவது பலருக்கு வசதியாக இருக்கிறது. பிராமணர்கள் பெரியாரை எதிர்ப்பதைப் புரிந்து கொள்ள முடியும், ஒப்புக் கொள்ள
முடியா விட்டாலும். ஆனால், தேசியம் பேசும்
பேர்வழிகள் ஏன் பெரியாரை எதிர்க்க வேண்டும்? அப்படிப்பட்ட
நிலைப்பாட்டுக்கு அடிப்படை என்ன? இதை விடக் கொடுமை, யாருக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அந்த தலித்
மக்களில் சிலரும் பெரியாருக்கு எதிராக கிளர்வது
காலத்தின் விசித்திரம்.
தமிழ்த் தேசியர்கள் ஏன் திராவிடத்தை
தூக்கிப் பிடிக்க மறுக்க வேண்டும்? தமிழ்த்
தேசியர்கள் பேசும் ஈழ அரசியல் உள்ளிட்ட பேச்சுக்களில் நுட்பமாக ஊடுருவியிருக்கும்
சாதீயம் இவர்கள் பின்னால் ஓடும் கரிச்சான்குஞ்சுகளால் புரிந்துகொள்ளப் படும் அளவிற்கு எளிதானதா?
இவர்கள் ஏன் தமிழ் மொழியைத் தூக்கிப்
பிடிக்கிறார்கள்? மொழி என்பது
தகவலைக் கடத்தும் ஒரு சாதனம் என்பதற்கு மேல் அதற்கு என்ன உணர்வு ரீதியான மரியாதை
தரப்பட வேண்டும்? தமிழ் மொழியின்
பெயரைச் சொல்லி வயறு மற்றும் அரசியல் வளர்க்கும் இந்த பேர்வழிகளில் எவராவது ஒரு காவியம்
படைத்திருகின்றனரா? செவ்வியல் காவியங்களுக்குப் பிறகு
தமிழில் எழுதப்பட்ட ஒரே காவியம் திராவிட இயக்க கவிஞர் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய
"இராவண காவியம்" என்ற உண்மைக்கு எதிராக எந்தப் பொய்யைக் கட்டமைக்கப்
போகிறார்கள் இந்தத் தமிழ்த் தேசியர்கள்?
கொஞ்சம் கூட உணர்ச்சி வசப்படாமல் தான்
சொல்ல வந்ததை சரியாக,
கொண்டு வந்திருக்கும் கவனமான
குறிப்புக்களின் உதவியுடன், இந்த தமிழ் தேசியர்களுக்கு
எதிரான வாதத்தை கட்டி எழுப்பும் மதிமாறன் அவர்கள் தற்காலத்திய பெரியாரிய புத்தி ஜீவி என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. பெரியாரியம் இவரைப் போல குறைந்தது நூறு சான்றோர்களையாவது தற்சமயம் வேண்டுகிறது.
நடுவண் அரசு அளவில் (அதாவது இந்திய
அளவில்) பாரதீய ஜனதா கட்சியும், தமிழ்நாட்டளவில்
பல தமிழ்த் தேசியர்களும் ஓட்டு அரசியல் ரீதியாக வலுப்பெற்று வருகின்ற நிலையில்,
1918 தொடங்கி அவரது இறுதிக் காலங்களான எழுபதுகளின்
மத்தி வரை, கிட்டத்தட்ட
ஐம்பத்தைந்து ஆண்டுகள், பார்ப்பனியத்தையும்
(பார்ப்பனரை அல்ல, ஈ.வெ.ரா.
அவர்களுக்கு ராஜாஜியோடு இருந்த நட்பை நினைவு கூறலாம்), சாதீயத்தையும், பெண்ணடிமைத் தனத்தையும் தீவிரமாக எதிர்த்து வந்த பெரியாரின் காலத்தால் அழிக்க
முடியாத அரசியல் தத்துவங்களை, நேற்று
முளைத்த காளான்கள் எல்லாம் விமரிசிக்கும் நிலையில், இவர்களையும் மனிதர்களாகவே மதித்து, இவர்களுக்கும் புரியும் வகையில் புத்தி ரீதியான ஒரு போராட்டத்தை
நடத்த வேண்டிய தேவை பெரியாரியர்களுக்கு உள்ளது.
ஈ.வெ.ரா. உயிரோடு இருந்திருந்தால்
அப்படிப்பட்ட ஒரு தேர்வையே நாடியிருப்பார்!
----
தந்தி டிவியும் சந்திப் பிழையும்
சென்னை புத்தகக் காட்சி
2014-15ல் தினந்தோறும் பல பிரமுகர்கள்
சொற்பொழிவாற்றினர். பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பேசிய அன்று சென்னையில் இருந்ததால் நேரடியாக அவரது சொற்பொழிவை ரசிக்க
முடிந்தது. பெரும்பாலும்
மற்ற பிரமுகர்களின் பேச்சை காணொளி மூலம் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. எல்லாமே தகுதி கொண்டவையாகவே இருந்தது.
இன்று காணொளி (YouTube) மூலம் இன்னொருவரின் பேச்சைக் கேட்ட பொழுது, மற்றவர்களோடு ஒப்பு நோக்கின், தரம் குறைந்தது என்பது மட்டுமல்லாமல், எந்த வித ஆராய்ச்சியோ, அறிவோ, உழைப்பின் மூலம்
ஏற்படுத்திக் கொண்ட தனிக் கருத்தோ, பண்டிதமோ இன்றி, ஒரு பொறியியல்
கல்லூரி முதலாமாண்டு மாணவர் பேசும் கல்லூரி அளவிலான பேச்சுப்
போட்டித் தரத்தில் இருந்தது. "ஊடகத்தில் தமிழ்" என்பதான தலைப்பு. தலைப்பைப் பற்றி
எதுவும் பேசக் காணோம். "எல்லா இடங்களிலும் தமிழ் நாசமாகி
விட்டது. ஊடகத்தில் மட்டும் ஏன் நல்ல தமிழை எதிர்பார்க்கிறீர்கள். அதுவெல்லாம்
நாங்கள் கொடுக்க முடியாது. எங்களுக்குத்
தெரியாது" என்பதாக இவரது பேச்சு அமைந்துள்ளது.
இவருக்கு 38 வயது என்று இவரே பேச்சின் ஊடாக குறிப்பிடுகிறார். எழுத்தாளர் சுஜாதாவை
"பேரறிஞர்" என்று விளிக்கிறார். யாருக்குமே தமிழ் தெரியவில்லை என்று சொல்கிறார். பணி அனுபவம் மிக்க
ஐம்பது வயதானவர்களைக் கூட ஊடக வேலைக்காக நேர்காணல் செய்யும் போது, அவர்களுக்கு ஒரு வாக்கியம் கூட சரியாகத் தெரியவில்லை
என்று தான் கண்டுபிடிப்பதாக கூறுகிறார். உடனடியாகவே, தன்னுடைய தற்கால முதலாளி (தந்தி டிவி) ஆதித்தன் அவர்கள்
தந்தி டிவி ரிப்பனில்
அடிக்கடி ஏன் சந்திப் பிழைகள் வருகின்றன என்று தம்மிடம், தான் ஆசிரியர் என்பதால், கேட்டு வருவதாக சொல்கிறார். அவரே, இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று அடுத்த வாக்கியத்திலேயே சொல்கிறார்.
மொத்தப் பேச்சு இருபது நிமிடம். முழுவதையும் கேட்டேன்.
மொத்தமும் அபத்தம். இவர்கள்தான் நமது இன்றைய ஊடகவியலாளர்கள். இவர்கள்தான் நமது ஹீரோக்கள். இவர்கள்தான் நமது தரம். இவர்கள்தான் நாம்.
ரங்கராஜ் பாண்டே, நீங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையின்
நீளத்தின் முடிவின்மை புரிகிறதா?
----
25-05-2015 நாளிட்ட
தி டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழில் ஒரு செய்தி.
Facebook உள்ளிட்ட சமூகத் தளங்களில் தீவிரமாக
பதிவுகளை இட்டும் இன்ன பிற தளச் செய்கைகளில் ஈடுபட்டும் வருவோர் "தனிமைத் துயரில் சிக்குண்டு
தவிப்பவர்கள் என்றும், குறைந்தபட்சம் தம்மை தனியன்களாக
உணர்பவர்கள் என்றும்" அந்தச் செய்தி மனநல மருத்துவர்களை
மேற்கோளிட்டு தெரிவிக்கிறது.
உண்மையா?
----
ஜீன் பால் சார்த்தர்
ஜீன் பால் சார்த்தர் பற்றி எஸ்.வி.ராஜதுரை அவர்கள்
எழுதியுள்ள "சார்த்தர் - விடுதலையின்
பாதைகள்" படித்து வருகிறேன். படித்தவரை, சார்த்தர் பற்றிய ஒரு நல்ல Reader இந்தப் புத்தகம் என்று தெரிகிறது. ராஜதுரை அவர்கள் கடுமையாக
உழைத்துள்ளார். பல்வேறு இடங்களில்
இருந்து தரவுகளை சேகரித்து அவைகளை உப தலைப்புகளின் கீழ் ஒருமைப் படுத்தி தனது அனுமானங்களை
பரிசோதித்துள்ளார்.
முழுமையாக படித்த பின்பு, இந்நூலைப் பற்றி விரிவாக எழுத உத்தேசம்.
----
IPL இளைஞர்கள் தவிர்க்கவும்
இன்று [வைகாசி 2, 2015] இரண்டு நல்ல
விஷயங்கள். காலை நல்லபடியாகவே
விடிந்திருக்க வேண்டும். சனிக்கிழமைகள் இப்போதெல்லாம் எதிர்பார்க்கக் கூடியவையாகவே விடிகின்றன. குப்புசாமி அவர்கள் தி ஹிந்துவில் எழுதும்
ஜெயகாந்தனைப் பற்றிய நினைவுத் தொடர் சனிக்கிழமைதான் வருகிறது. இவர் ஜே.கே.வுடன் பல வருடங்கள் இருந்தவராக
தன்னை அறிமுகப்படுத்திக்
கொள்கிறார். ரசிகர்,
தொண்டர், சீடர் என்றெல்லாம் இவரை அறிய முடிந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது இவரது தமிழ்தான். பரிசுத்தமான, வார்த்தைகளுக்கு பஞ்சமே இல்லாத
இவரது உரைநடை மிகவும் அரிதான ஒன்று இற்றைய நாட்களில். இன்று வந்துள்ள கட்டுரை போன வாரத்தின்
தொடர்ச்சிதான் என்றாலும், ஜெயகாந்தன் அவர்கள் எப்படி ஒரு சிறந்த சொற்பொழிவாளராக இருந்தார் என்பதை ஒரு நிகழ்வின்
மூலம் தெளிவுற விளக்குகிறார். சில பத்திகளில்
இவர் எழுதியிருக்கும் வாக்கியங்கள் பிரமிப்பானவை. எண்ண முதிர்ச்சியும் மொழி முழுவதுமாக வசப்பட்டும் இருந்தாலொழிய இத்தகைய வாக்கியங்கள் ஒருவருக்கு கைவராது. அற்புதமான கட்டுரை.
மற்றொன்று ஒரு காணொலி பற்றியது. ஜே.கே. நினைவாக சென்னையில் நடந்த அஞ்சலிக்
கூட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன்
அவர்கள் ஆற்றியுள்ள உரையைக் கேட்க நேர்ந்தது. எளிதான ஆனால் ஆழமான உரை. ஜே.கே.வை எஸ்ரா எப்படி உணர்ந்திருக்கிறார்
என்பதை மிகவும்
spontaneous-ஆக வெளிப்படுத்துகிறார். ஜே.கே.வின் ஒரு சிறுகதை டால்ஸ்டாயின் செவ்வியல்
படைப்பான அன்னா கரீனினா-வோடு எப்படி ஒப்பு நோக்கத் தகுந்தது என்பதை எஸ்ரா சொல்லும்போது, கலைஞனுக்கு இறப்பில்லை என்பதை புரிந்து கொள்ள
முடிகிறது. YouTube-ல் இந்தக்
காணொலி கிடைக்கிறது.
இந்த சனிக்கிழமை இன்னும் விசேஷமானது
கூட. பழ.அதியமான்
அவர்களின் செவ்வி ஒன்று தி
ஹிந்து தமிழ்ப் பதிப்பில் நடுப்பக்கத்தில் இருக்கிறது. பாரதியாரின் கவிதைகளை குழந்தைகள் படிப்பதற்காக
எளிமைப் படுத்தி பதிப்புச் செய்துள்ளார். அதைப் பற்றிய செவ்வி இது.
நான் ஏற்கனவே நினைத்துள்ள படிக்கு, பழ.அதியமான், ஆ.இரா.வேங்கடசலபதி மற்றும் மதிவாணன் ஆகியோர் தமிழின் இன்றைய முக்கியமான
ஆய்வுக் கட்டுரையாளர்கள். இந்த மூவரின் அனைத்துப் புத்தகங்களுமே படிக்கத் தகுந்தவை. இவர்கள் நிறைய எழுதுவது,
நமக்கு முக்கியமோ இல்லையோ, தமிழுக்கு முக்கியம். IPL பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் இவர்கள் மூவரையும் படிக்க
முடியும் என்று நான் நினைக்கவில்லை.
அவரவர்களுக்கு முடிந்ததை அவரவர்கள்
செய்கிறார்கள்!
----
MANUFACTURING
A PRESIDENT
Watched WAG THE DOG.
Just a few weeks before the
Presidential election, the American President is caught in a sex scandal. He is
accused of molesting a Girl Scout in the Oval office. This might adversely
affect the chances of his re-election. Presidential Adviser Winifred Ames (Anne
Heche) and a political spin-doctor Conrad Brean (Robert di Niro), in an attempt
to save the political fortunes of the President, hire Hollywood producer
Stanley Motts (Dustin Hoffman) who stage-manages an
apparent war against Albania on the charge that it abets Islamic terrorism.
Their idea is to divert the
attention of American voting public from the sex scandal. Americans tend to
believe that their government is the savior of the just world and only it could
get rid of the menace of terrorism. A President who wins a war for them is sure
to regain his office for the next term. For them, the matter is as simple as
this. Stanley Motts, in his ruthless and Machiavellian execution, arranges
events in perfect sequence so as to make them appear real and scathing.
Stanley Motts fabricates a POW
as well. Schumann is the 'engineered' POW. His photo is flashed across the
American media. People are made to believe that their President does spend his
midnight oil to rescue Mr.Schumann from the draconian tentacles of Albanian
terrorists. In real, Schumann is mentally deranged criminal serving a long term
in prison for having raped a nun, ten years back.
The flight that carries Winifred
Ames, Conrad Brean, Stanley Motts and Schumann crashes into a no man's land and
Schumann is killed. Unfazed by this, Stanley Motts finds a new opportunity in
this. He 'makes' a martyr out of Schumann and manages to present before the
public that the Albanian terrorists had shot Schumann dead.
We are told that the American
President has won the election very comfortably with 89% voters favoring his
re-election. Televisions keep blaring that the election slogan of the President
- "Don't change horses in mid stream" - has played a stellar role in
the success of the President. Enraged by the fact that his role is not taken
into account with due deserve, Stanley Motts (Hollywood Producer) storms out of
the conference hall saying he will 'expose' everything. He chooses to avoid the
warnings given by Conrad Brean and Winifred Ames.
In the last scene, the audience
are told that the Hollywood producer, who was between 48 and 52, died of heart
attack suddenly. Conrad Brean and Winifred Ames descend from a limo to pay
their homage to their friend who stage-managed an election for them, after all.
This movie was released in the
year 1998 after the episode involving Monica Lewinsky and Clinton broke out. It
is an acidic statement on the farcical politics of the day. Highly watchable!
----