மூலவர்
ஒன்று; உற்சவர்
மூன்று
தன்னுடைய
எழுத்து நேர்மைக்காக கோவை ஞானி பரவலாக அறியப்படுபவர். இடதுசாரி அரசியல்
தத்துவத்தைக் கற்றவர். இடதுசாரி இயக்கங்களிலும் ஊடுருவியிருந்த சாதி அரசியலை
உணர்ந்தவர். இலக்கியகர்த்தா. இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் ஒரு நீண்ட
நேர்காணலை கோவை ஞானி அவர்களிடம் நடத்தியிருக்கிறார். அற்புதமாக வந்திருக்கிறது.
எவரும் பொறாமைப்படும்படியான அறிஞர். இடைவிடாத படிப்பாளி. கற்றதை அப்படியே ஏற்காமல்
தன்னுடைய சுயத்தை அதிலே ஏற்றி உணர்பவர். இப்படிப்பட்ட
அறிஞரை ஒரு வெகுஜன தினசரி அசாதாரணமான முக்கியத்துவம் அளித்து முழுப்பக்க நேர்காணலை
செய்துள்ளது என்பது உள்ளபடியே பாராட்டத் தக்கது.
இந்தியாவின்
மூன்று பாரியமான மார்க்சீயர்கள் என்று அம்பேத்கர்,
காந்தி
மற்றும் பெரியாரை குறிக்கிறார் ஞானி. இந்தியாவில் புரையோடிப் போயிருக்கும்
சாதியத்தின் - தீண்டாமையின் கொடுமையை தீவிரமாக வெளிப்படுத்தியதற்காக
எதிர்த்ததற்காக அம்பேத்கரும், இந்திய அரசியலில்
"சுயத்தை வருத்திக் கொள்ளுதல்" என்பது அமைப்புக்களுக்கு எதிரான வன்மையான
ஆயுதம் என்று இந்தியர் அனைவரையும் உணர வைத்ததற்காக காந்தியும், பிராமணியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப்
போராடியதற்காக பெரியாரும் இந்தியா உருவாக்கிய மூன்று மாபெரும் மார்க்சீயர்கள்
என்று குறிப்பிடுகிறார் ஞானி.
ஒவ்வொரு
தேசத்திலும், அங்கு நிலவும்
தனித்தன்மைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு விதமாக மார்க்சீயம்
புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று சிலர் அபிப்பிராயப் படுகின்றனர். ஞானியின்
நேர்காணலை வாசித்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், மார்க்சீயத்தை ஒவ்வொருவரும் தன்னுடைய விழுமியங்களுக்கு
ஏற்ப புரிந்து கொள்ளுகிறார்கள்.
சரிதானே?
-------
ஆயிரத்தில்
ஒருவன்
எனது
நண்பரின் இல்லத்திற்கு சென்றிருந்த பொழுது, மத்திய இடைநிலைக் கல்வி
வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்த அவரது மகளின் புத்தகங்களை பழைய
பேப்பர் கடைக்கு அனுப்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். HG
Wells எழுதிய
The Invisible Man கண்ணில் தட்டுப்படவே ஆசையோடு அதை எடுத்தேன். Unabridged
version. பனிரெண்டாம்
வகுப்பில் தனக்கு அது non-detailed text என்றாள் அந்த சிறுமி. உனக்குப் பிடித்ததா என்று
கேட்டேன். புன்னகைத்து சொன்னாள்: "நினைத்தவுடன் அவனைப்
போல யாருமே பார்க்க முடியாமல் காணாமல் போக முடிந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்
இல்லையா அங்கிள்!"
இந்தப்
புத்தகத்தை முதன் முதலாக படித்தது 83ம் வருடம் என்று
நினைக்கிறேன். அற்புதமான அறிவியல் புதினம். இதிலுள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும்
சராசரியாக இருபது வார்த்தைகளாவது unfamiliar
வார்த்தைகளாக
இருக்கும். இப்பொழுதும் புரட்டிப் பார்க்கிறேன். பல வார்த்தைகள் unfamiliar ஆகத்தான் இருக்கின்றன. கதாபாத்திரங்களின் முக அமைப்புகள், பாவனைகள், உடை அணிந்திருக்கும் விதம், நிலவெளிகளைப் பற்றிய விவரணை,
மாந்தர்கள்
தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வது போன்ற நிலைகளை விவரிக்க எத்தனை விதமான
வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் HG
Wells!
அண்மையில்
எனக்கு நண்பரொருவர் வாட்ஸ்அப்பில் போஸ்டர் ஒன்றை அனுப்பியிருந்தார். READ A THOUSAND BOOKS AND WORDS WILL FLOW LIKE A
RIVER.
அந்த
ஆயிரம் புத்தகங்களில் The Invisible Man கட்டாயமாக இருக்கிறது.
-------
"Be judicious; or else, attract judicial proceedings."
ஒரே
மாதிரியான தோற்றம் தரும் ஆங்கில வார்த்தைகள் கற்போரின் மனதில் குழப்பத்தை
ஏற்படுத்துகின்றன. Judicial மற்றும் judicious என்ற
வார்த்தைகளுக்கிடையே உள்ள அர்த்த வித்தியாசம் என்ன என்ற கேள்வி அண்மை
வகுப்பொன்றில் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. Jury,
judge, judicical, judicious, jurisprudence, jurisdiction போன்ற வார்த்தைகள்
கற்பவனுக்கு சிரமம் தரலாம்.
Judicial என்ற வார்த்தைக்கு
"நீதிபதி அல்லது நீதிமன்ற சம்பந்தமான" என்று பொருள் கொள்ளலாம். Judicial means pertaining to a judge or court of law.
எடுத்துக்காட்டாக, This is a judicial pronouncement என்ற வாக்கியம் என்ன பொருள்
படுகிறது? 'இது ஒரு நீதிமன்றக் கட்டளை' என்பதாக இந்த வாக்கியம் மொழிபெயர்க்கப் பட்டால், குத்துமதிப்பாக சரியான பெயர்ப்புத்தான். கீழே உள்ள இரு
வாக்கியங்களையும் பாருங்கள்.
[1] All his work shows a judicial
tone of mind, and is remarkable for the charm of its style.
[2] The Supreme Court ordered a
judicial inquiry into the deaths.
இந்த
இரண்டு வாக்கியங்களிலும் judicial என்ற வார்த்தை 'நீதிபதி அல்லது நீதிமன்ற சம்பந்தமான' என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.
அடுத்த
வார்த்தைக்கு வருவோம். Judicious என்ற வார்த்தை என்ன
பொருள்பட்டு நிற்கிறது? "நியாயமான, சரியான, ஜாக்கிரதை உணர்வு
கொண்ட" என்பதாக பொருள் கொள்ளலாம். Judicious
means wise, showing sound judgment, discreet.
இந்த
வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். 'Her action was judicious.' அவளுடைய செய்கை நியாயமானது.
கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு வாக்கியங்களிலும் judicious
நியாயமாகவே
பயன்படுத்தப்பட்டுள்ளது.
[1] Since I have a small budget,
I have to be judicious about my purchases.
[2] When it comes to choosing
friends, be very judicious and choose wisely.
Jurisprudence மற்றும் jurisdiction ஆகியவற்றை இன்னொரு தருணத்தில்
அலசலாம்.
-------
DISTINCTIONS IN WORD USAGE
CUSTOM - HABIT என்ற வார்த்தைகளுக்குமே 'வழக்கம்' /
'வழமை' என்ற பொருள்தான்
என்றாலும் இவைகளுக்கிடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று verbal
ability வகுப்பில்
ஒரு மாணவர் கேட்டார்.
CUSTOM என்ற வார்த்தையை தனிமனிதப்
பழக்கங்களைப் பற்றி பேசும் பொழுது பயன்படுத்துதல் ஆகாது; ஒரு சமூகத்தின், இனக்குழுவின், தேசத்தின் உறுப்பினர்கள் / மக்கள் அனைவருக்குமான பொதுப்
பழக்கங்களைக் குறிக்கத்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். காட்டாக,
Burying the dead is an ancient
custom among Christians - என்பது சரி. இறந்தவர்களைப் புதைப்பது என்பது
கிறித்துவர்களின் நெடுநாளைய பழக்கம். இந்த வாக்கியத்தில் custom என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுதான் சரி. மாறாக, habit என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பாருங்கள். ஒரு விதமான
அசௌகரியத்தை உணரமுடியும்.
கீழே
உள்ள வாக்கியத்தைப் பாருங்கள்.
Smoking is a bad habit. இதிலே ஒரு தனிமனிதனின் பழக்கம் குறிக்கப்படுகிறது. ஆகையால், இந்த வாக்கியத்தில் habit என்ற வார்த்தை சரியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
Smoking is a bad habit. இதிலே ஒரு தனிமனிதனின் பழக்கம் குறிக்கப்படுகிறது. ஆகையால், இந்த வாக்கியத்தில் habit என்ற வார்த்தை சரியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
கீழ்க்கண்ட
நான்கு வாக்கியங்களிலும் custom என்ற வார்த்தைப் பயன்பாடு
சரியாக உள்ளதை அறியலாம்.
[1] They have practiced this
custom for many years.
[2] I am unfamiliar with the
customs of this country.
[3] That custom originated with
the American Indians.
[4] You know more than I do about
German customs and traditions.
மேற்கண்டதைப்
போலவே, கீழே நான்கு
வாக்கியங்களிலும் habit என்ற வார்த்தைப்
பயன்பட்டிருப்பதைப் பாருங்கள். சரியான இடங்களில்தான் இந்த வார்த்தைப் பயன்படுத்தப்
பட்டுள்ளது.
[1] I am in the habit of taking a
shower in the morning.
[2] He was in the habit of taking
a walk before breakfast.
[3] He has the habit of reading
the newspaper while eating.
[4] You should try to form the habit of using your
dictionaries.
0 comments:
Post a Comment