வி.ஐ.பி.

| Tuesday, July 21, 2015
வி..பி.
நற்றிணை பதிப்பகம் தற்போது புழக்கத்தில் இல்லாத பல நாவல்களை செம்பதிப்புகளாக கொண்டு வருகிறது. .நா.சு. அவர்களின் பல நாவல்களை இக்கால இளைஞர்கள் படிக்க முடிவது இந்த கைங்கர்யத்தால்தான். நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1975ம் வருடம் வெளிவந்த "தலைகீழ் விகிதங்கள்" என்ற நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்

இதுதான் இவருடைய முதல் நாவல் என்று நம்புவது கடினமாக உள்ளது. Craft அவ்வளவு கச்சிதமாக வந்துள்ளது. நாகர்கோவில் நாஞ்சில் பிள்ளைமார்கள் குடும்பங்களின் பிரச்சினைகள் எழுபதுகளில் எங்கனம் இருந்தன என்பது நுட்பமாக இவர் எழுத்தில் ஆகி வந்துள்ளது. எழுபதுகளின் பெரும்பகுதி பாலகனாகவும், அதன் முடிவில் சிறுவனாகவும் இருந்த எனக்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் பல பிரச்சினைகள், பல குடும்பங்களை உள்ளிருந்து பார்த்து உணர்ந்திருக்கும் படியால், மொத்த அத்துவானமாக தெரிந்திருக்கிறது. சிவதாணு அன்றைய எல்லா இளைஞர்களின் பிரதிநிதிதான். பட்டப்படிப்பு முடிக்கும் முன்னமேயே placement order வாங்கிக் கொள்ளும் இன்றைய இளைஞர்கள் எழுபதுகளின் யுவன்கள் யுவதிகள் வேலைக்காக ஆண்டுக்கணக்கில் பட்டு வந்த அவதியைப் புரிந்துகொள்ள முடியாது

இந்தக் கதை இரண்டாயிரம் ஆண்டளவில் "சொல்ல மறந்த கதை" என்ற தலைப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில் சினிமாவாக வெளிவந்தது. சினிமா என்ற அளவில் நன்றாகவே எடுக்கப்பட்டிருந்த படம் என்று சொல்ல வேண்டும். இயக்குனர் சேரன் சிவதாணுவின் மன அவசங்களை முடிந்த வரையில் சிறப்பாகவே சித்தரித்திருந்தார். சிவதாணுவின் மனைவியாக நடித்திருந்த பெண்ணும் அந்தக் கதாபாத்திரத்தின் குழப்பங்களை திரையில் திறமையாகவே கொண்டுவந்திருந்தார். இரண்டொரு பாடல்கள் கூட இனிமையாக இருந்ததாக நினைவு

ஆனால், நாவலோடு ஒப்பிடும்போது, சினிமா ரொம்பவுமே சாதாரணம். கதையில் நாஞ்சில் பிள்ளைகளின் தமிழ் அப்படியே கொண்டுவரப்பட்டுள்ளது. அன்றைய வருடங்களின் மனப்போக்கு, வேதனைகள், துயரங்கள், படித்த முதல் தலைமுறை தலையெடுக்க இருந்ததில் உள்ள தடைகள், அவைகளை உடைக்க முட்டும்போது தலை பொத்தி உருவான மண்டைக் காயங்கள், மன ரணங்கள், திருமண பேரத்தில் விற்கப்படும் மணமகனுக்கு மனசாட்சி மட்டும் இருந்து விட்டால் அதன் காரணமாகவே கிளம்பும் பூதங்கள், கணவன் தன்னுடைய அப்பாவின் பேச்சைக் கேட்க மாட்டானா என்று மருகும் தனவந்தர் வீட்டு பெண்டுகள், விலைக்குப் போன அண்ணன் மீண்டும் தங்களுடைய அண்ணனாகவே மீள மாட்டான என்று ஏங்கும் தம்பி தங்கைகள், எப்படியும் பேசும் சுற்றம் மற்றும் நட்பு - எத்தனை எத்தனை சூட்சுமங்கள் மனிதர்களின் மத்தியில்

தலைகீழ் விகிதங்கள் - தமிழ் நாவல் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டோர் விட்டுவிட முடியாத ஒரு படைப்பு. படைப்பிலக்கியத்தில் உச்சமான ஒன்றா என்று தெரியாது, உண்மையான படைப்பு என்பதை சிவதாணுவுடன் நம்மை இனம் கண்டுகொள்ளும்போதே உணர்ந்துவிடுகிறோம்

[நற்றிணைப் பதிப்பகம், சென்னை, உரூபா 225/-]
----
முப்பெருந்தேர்
 
டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்', உலக புதின இலக்கியத்தின் உச்சம் என்று மார்க்சிஸ்ட் விமரிசகர் மட்டுமன்றி வேறு விமரிசன தத்துவ மரபைச் சேர்ந்தவர்களும் கூட ஒப்புக்கொள்கிறார்கள்

படைகளின் நகர்தல், பூகோள அமைப்பு - அது எப்படி ஒரு போரின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கிறது, இதில் தனி மனிதர்களின் பராக்கிரமங்கள் காற்றில் நிலையின்றி அலைவது, போரில் தனி மனிதர்களின் வாழ்க்கை - முக்கியமாக காதல், போரின் உக்கிரத்தில் காதலிகளின் திருஉருக்கள் கண்ணில் தோன்றி யுத்தத்தின் லட்சியத்தை கேலி செய்வது, அரண்மனை போன்ற மாளிகைகளில் ஒற்றைப் பனையாய் வேதனையுற்று காதலன் திரும்ப கடவுளிடம் கோரிக்கையன்றி வேறெதுவும் வேண்டா அன்புக் காதலியர், வாழ்க்கை என்பது எந்த தத்துவத்தின் வியாக்கியானமும் அல்ல, மாறாக அது தற்செயலான சம்பவங்களின் தொடர்ச்சியே என்று திரும்ப திரும்ப புரிய வைக்கும் நிகழ்வுகள், வரலாற்றுப் பாட புத்தகங்களில் பிரமிப்புடன் படித்த நெப்போலியன், குட்டுஜோவ் போன்ற சைன்யத் தளபதிகள், முழுவதுமாக எரிந்து முடிந்த மாஸ்கோ - என எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம் ஏன் 'போரும் வாழ்வும்' உலக மகா இலக்கியம் என்று. பெசுகோவ், நடாலி, சோனியா, ஆண்ட்ரு என்று நம்முடன் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் கதாபாத்திரங்கள் கூட இதற்குக் காரணம்தான்

ஆனாலும் கூட, RESURRECTION இன்னமும் கூட சிறந்த ஒன்றோ என்று ஒரு எண்ணம். மாஸ்லோவா மற்றும் அவளின் நலத்தை ஒரு திருட்டு இரவில் நுகர்ந்த நெக்லிடோவ், சிறையில் சந்திக்கும் பெரும் புரட்சியாளர் சைமன்சன் ஆகிய மூன்று பெரும் கதாபாத்திரங்கள் இந்த நாவலை அக எழுச்சியின் பிரதானக் குறியீடாக மாற்றுகின்றன. தான் செய்த தவற்றை எப்படியும் - எந்த விலை கொடுத்தாவது பிராயச்சித்தம் செய்துவிட வேண்டும் என்று பாடுபடும் நெக்லிடோவ், மாஸ்லோவாவின் தண்டனையை ஒட்டி தானும் சைபீரியாவிற்கு ஓடுகிறான். நான்கு வருடங்கள் அவளுக்காக காத்திருந்தும் இறுதியில் அவள் சைமன்சன் தன்னுடைய உதவியை எதிர் நோக்கியிருக்கிறார் - அவருக்குத்தான் தன்னைப் போன்றவள் தேவை என்று நெக்லிடோவிடம் சொல்லிவிட்டு நகர்கிறாள்.

"போரும் வாழ்வும்", "RESURRECTION", மற்றும் "அன்னா கரினினா" - டால்ஸ்டாயின் இந்த மூன்று நாவல்களும் படைக்கப்பட்டிரா விட்டால், இந்த உலகம் மிகவும் அற்பமாகவே பலருக்கும் தோன்றியிருக்கும். எனக்கும் கூட.
----

LONG LIVE MR.LONG!

Every student of English literature in India should read many volumes on History of English Literature. Many doyens of language history have come out with their own contributions in this field, Starting from Ifor Evans, GM Trevelyan, David Daiches and hundreds of others have been prescribed by various universities across the country. But I am not sure if any university has prescribed the volume written by William J Long. This was written in the year 1905. Comparatively, it is much smaller one in size and scope. In its last pages, Gerard Manley Hopkins is referred as the latest English poet. Wreck of the Deutshland is the poem discussed on the last page of the volume. Nothing on the Twentieth Century Literature is mentioned. This volume had already been completed even before the onset of 20th Century Literature.

Still it is very important in many respects. In a lucid language, Mr.Long has, in his inimitable style, chosen to narrate how the history of British Isles' literature unfolded itself before the eyes of the world. All the remarks on the litterateurs - poets, playwrights, novelists, fiction writers, essayists - are incredibly succinct and analytically sound. 

This entire volume should be translated into Tamil. If it is done, it will be among the richest contributions to Tamil from the intellectual riches of other lands. Expert and professional translators should come forward to take up the task. Good publishing companies should own sponsorship responsibilities. I plan to translate some of the pages, at least. Some poets and dramatists do often visit my dreams. Some tease. Others tantalize. Still others, haunt. I got to write about them all.
----



0 comments:

Post a Comment