மெக்காலே – பெரியார் – அம்பேத்கர் – இங்கிலீசு – இண்டியன்ஸ்

| Saturday, October 17, 2015
சாமி போல வந்தாய் ராசா!
 
கி.பி.1600-ல் இந்திய மண்ணில் நிறுவப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியோடு ஆங்கிலமும் உள்ளே நுழைந்தது. இந்தியர்கள் பொறுத்தவரை இந்த அன்னிய பாஷையை விருப்பத்தோடு முதலில் அணுகியது சூரத் நகரத்து பார்சி வணிகர்கள்தான்.  கம்பெனிக்காரர்களுக்கும் இந்தியக் குடிகளுக்கும் இடையே தரகர்களாக தங்களைப் பாவித்துக் கொண்ட சூரத் பார்சி வணிகர்கள் பெரும் பணம் ஈட்ட முடிந்தது.  நாளடைவில் இந்த விருப்பம் மற்ற ஆதிக்க சாதீயர்களிடமும் தொற்றிக் கொண்டது.  நிலைமை இப்படி இருக்க, 1830 வாக்கில் கம்பெனியார் எடுத்த ஒரு முடிவானது, துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, நிர்வாகம் மற்றும் கல்வி அமைப்புக்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்தது.  இன்னமும் சொல்லப் போனால், இந்தியாவில் ஆங்கில பாஷையின் வளர்ச்சிக்கான விதையே இதுதான்.  பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவில் உயர் கல்வியை பரவலாக்கம் செய்ய எந்த வகையான முகாந்திரங்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க கம்பெனியாரைக் கேட்டுக் கொண்டது.  இதற்காகவென ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவும் முன்வந்தது.   

உயர் கல்வியை எந்த மொழியில் இந்தியர்களுக்கு அளிப்பது?  இந்தியர்களின் பாரம்பரிய அறிவையே உயர்கல்வி வரை படிப்பிப்பதா? அல்லது ஐரோப்பாவின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை  உயர் கல்வி நிலையில் இந்தியாவில் ஆங்கிலத்தின் மூலம் வளர்த்தெடுப்பதா? இந்திய கல்வி முறை முழுமைக்குமே ஆங்கில வழி போதனை சிறந்த ஒன்றா? என்ற படியெல்லாம் சூடான விவாதங்கள் கிளம்பின.  ஆனால் ஒரு தனி மனிதர் இத்துணை கேள்விகளுக்கும் அசைக்கமுடியாத பதில்களை வைத்திருந்தார்:  அவரின் தீர்க்கமான கருத்து இந்தியாவை இரண்டாக பிளந்து போட்டது என்றாலுங்கூட.  இந்திய துணைக் கண்டத்தில் நிர்வாகம், கல்வி ஆகியவற்றில் ஆங்கிலம் பிற்காலத்தில் செலுத்தப் போகும் நம்ப முடியாத செல்வாக்கை துவக்கி வைத்தது அவருடைய தீர்மானங்கள்தாம். இந்திய பொது கல்விக் குழுவின் [Indian Committee for Public Instruction] தலைவராக நியமிக்கப்பட்டிருந்த மெக்காலே மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் குழப்பமே இல்லாத விடைகளைக் கண்டறிந்து விட்டார்.  இந்த விடைகளில் இந்திய சாதீயம் தூளாகிவிட்டது என்பதை அவரால் யூகிக்க முடிந்ததா என்பதை எந்த இந்திய ஜோசியராலும் சொல்ல முடியாது என்று நாம் சொன்னால் காழியூர் நாராயணன் கோபிக்கலாம்.

இந்திய பாரம்பரிய அறிவை அரேபிய மற்றும் சமஸ்க்ருத மொழிகளில் இந்தியர்களுக்கு கற்பிப்பதைக் காட்டிலும் ஐரோப்பாவின் நவீன அறிவியலை ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று வாதிட்டார்.  மெக்காலேவின் மொழி அகங்காரமானது.  இந்திய பாரம்பரிய அறிவைப் பற்றியதான அவரது வெறுப்பு பிரசித்தமானது.  இருந்தபோதிலும், அவரது வாதங்களுக்கு வேறொரு கோணத்தில் நியாமும் கனமும் இருக்கத்தான் செய்தன.  நாள் பட்டுப்போன, ஒன்றுக்கும் உதவாத பாரம்பரிய அறிவை வழக்கொழிந்து போன மொழிகளில் கற்பிப்பதால் இந்தியா முன்னேற்றப் பாதையில் நகராது என்ற பரிந்துரைகளை தன்னுடைய புகழ்பெற்ற சாசனத்தில் தெரிவித்தார்.  ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இந்திய மாணவர்கள் பணம் கட்டிப் படிப்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றுணர்ந்த மெக்காலே, மரணப் படுக்கையில் மூச்சு விட சிரமப்படும் சில இந்திய செவ்வியல் மொழிகளை காப்பாற்ற கொஞ்சம் கம்பெனி பணத்தை “செலவிட்டுத் தொலைக்கலாம்” என்று கருணை காட்டவும்  முன்வந்தார்.  இந்திய பாரம்பரிய அறிவைக் கற்பதினால் எவரும் வேலை வாய்ப்புக்களை பெற முடியாது.  அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுக்கும், ஏன் தங்களுக்குமே கூட சுமையாகி விடுவார்கள் என்ற அவரின் தரிசனம் முழுவதும் தவறா என்பது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விடயம்.  மேற்கொண்டு இதைப்பற்றி பேசிய மெக்காலே, ஐரோப்பிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை கற்கும் இந்தியர்கள் அவற்றை தங்கள் நாட்டு மக்களிடைய பரப்ப வேண்டும் என்றும் இந்திய மொழிகளை ஐரோப்பிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த மொழிகளாக சக்தியேற்றும் ஏற்பாட்டை இந்த முதல் தலைமுறை ஐரோப்பியக் கல்வி பெற்ற இந்தியர்கள்தான் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  பெரும்பாலான இந்தியர்கள் ஐரோப்பிய அறிவைப் பெற்றிருக்கும் நாளில், இந்திய மண்ணை விட்டு பிரிட்டிஷ் அமைப்புகள் வெளியேற வேண்டி வரும் என்றும் அத்தகைய ஒரு பெரு ஞானம் அவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி மூலம் மட்டும்தான் உருவாகும் என்றும் தீர்மானமாகவே மெக்காலே தெரிவித்தார்.  

மெக்காலேவின் பரிந்துரைகள் முற்று முழுமையாக 1835-ம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு விருப்பமுள்ள இந்தியர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி நாடு முழுவதும் பரவலாக துவக்கப்பட்டது.  சரியாக 22 ஆண்டுகள் கழித்து, அதாவது 1857-ல், இந்திய துணைக் கண்டத்தில் ஐந்து பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன.  மெட்ராஸ், கல்கத்தா, அலகாபாத், பம்பாய் மற்றும் லாகூர் நகரங்களில் துவக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகங்களின் நோக்கம் ஐரோப்பிய கல்வி முறையை இந்திய மண்ணிலே பரவலாக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, இங்கு ஆட்சி மொழியாக இருந்த பெர்சிய மொழியை அகற்றிவிட்டு, அவ்விடத்திலே ஆங்கிலத்தை அமர்த்துவதே.  அன்று வேகம் எடுக்கத் துவங்கிய ஆங்கில மொழி வளர்ச்சி வெறும் நிர்வாகம், கல்வி போன்ற அமைப்புகளோடு மட்டும் நின்று விடவில்லை.  தனக்கும் தன் குடும்பத்திற்கும் சுபிட்சமான வாழ்வை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் பெரு விருப்பத்தோடு கற்கும் மொழியாக இன்றுவரை ஆங்கிலம் இருந்து வருவது கண்கூடு.  இது மட்டுமன்றி, இந்திய துணைக் கண்டத்தில் ஆங்கிலத்தின் உச்ச பட்ச சாதனை எதுவென்றால், இந்தியர்கள் அனைவரையும் சாதி, மத, இன வேறுபாடு இன்றி ஒரே கூரையின் கீழ் அருகருகே ஆறு மணி நேரத்திற்கு மேலாக தினந்தோறும் உட்கார வைத்ததுதான் என்று சுலபமாக சொல்லலாம்.  ஆறாயிரம் வருடங்களாக நடந்திராத அதிசயம் இது.  நிலச்சுவான்தார்களாலும், ராஜாக்காளாலும், ஜமீன்தார்களாலும், உயர் சாதீயர்களாலும் ஜீரணிக்க முடியாத, ஆனால் ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய ஒரு சமூக மாற்றத்தை மெக்காலே துவக்கி வைத்தார் என்று சொல்வது, இன்றைய அரசியல் சூழலில் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், மிகச் சரியாகவே இருக்கலாம். 

பத்தொன்பதாம் ஆரம்ப வருடங்கள் தொடங்கி இற்றைய நாள் வரை இந்திய பெரும் நிலப்பரப்பில் நடந்திருக்கும் சமதர்மத்தை நோக்கிய அத்தனை சமுதாய மாற்றங்களையும் ஆங்கிலம் ஊனாக உயிராக ஆத்மாவாக ஊடுருவி நடத்தி வந்திருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்பவர்கள், மதவாத சக்திகளும் எதேச்சதிகார அரசியல் சக்திகளும், ஆறாயிரம் வருட இந்தியப் பாரம்பரிய விழுமியங்களை மீட்டுக் கொண்டு வருவதில் இன்று தீவிரமாக இயங்கி வரும் விளிம்புநிலைக் குழுக்களும் ஏன் ஆங்கிலத்தை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.
  

பிரதேச பாஷைகளும் ‘இந்திய’ பாஷையும்

|

மொழிகளின் தேசம்

இந்தியா பல நூறு மொழிகள் பேசப்படும் பிரதேசமாகவே எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது.  ஒன்றுக்கும் மேற்பட்ட செவ்வியல் கலாச்சாரங்களைக் கொண்ட ஒரே பூமி இது.  பழமையான ஒன்றுக்கொன்று வேறுபட்ட இனப் பாரம்பரியங்களைக் கொண்ட நிலவியலும் கூட.  இவைகளில் பெரும்பாலானவை வளர்ந்தும் செழித்தும் வந்திருக்கின்றன.  வேறு நாடுகளிலிருந்தும் மொழிகள் பல காரணங்கள் பொருட்டு இங்கு நுழைந்து செல்வாக்கை அடைந்திருக்கின்றன.  மதம், அரசியல், வணிகம் போன்றவை பொருட்டு நுழைந்த மொழிகள் தவிர்த்து, இங்கிருந்து வெளியே சென்றவர்கள் கொண்டு வந்த மொழிகளும் இந்த மண்ணுடைய வரலாற்றில் உண்டு.  புலம் பெயர்ந்தவர்கள் புது மண்ணின் அழகில், சிறப்பில் மயங்கி அங்கிருந்த இலக்கியங்களை இந்திய மொழிகளில் பெயர்த்த சம்பவங்கள் நிறைய உண்டு.  இந்திய பாஷைகளை மொழியியல் ஆய்வுக்குட்படுத்துகிற போது, அவைகள் குறைந்த பட்சம் நான்கு வேறுபட்ட மூல மொழிகளில் இருந்து கிளைத்துள்ளதை அறிய முடியும். இந்திய மொழிகளையும் அவற்றின் வட்டார வழக்குகளையும் கணக்கிட்டால், ஆயிரத்தைத் தாண்டும். 

இந்தியாவின் “தேசிய மொழி” என்று எந்த ஒற்றை மொழியையாவது அறிவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் 22 மொழிகளை தேசிய மொழிகள் என்று அறிவிக்கிறது. இந்திய பணத் தாள்களில் மதிப்பு பதினேழு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.  குறைந்தது பத்தாயிரம் நபர்களாவது பேசும் அட்டவனையிடப்படாத மொழிகள் நூறுக்கு மேல் உள்ளன.  “செத்துப் போன மொழிகளும்” கோயில்களில் தஞ்சம் புகுந்து பிழைத்து வரும் பெரும் புண்ணிய பூமி இந்தியா.

“இந்தியாவில் ஆங்கிலம்” என்பதை இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.  எங்கிருந்தோ வந்து, மெதுவாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டவாறு வணிகத்தை முதலில் வசப்படுத்தியது ஆங்கிலம்.  நிர்வாகம், கல்வி மூலமாக எங்கும் வியாபித்து இந்திய துணைக் கண்டத்தையே இணைக்கும் பாலமாக இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.  இதைத் தங்களுடைய மொழியாகவே பாவிக்கும் இந்தியர்கள், இதன் மூலமாகவே பல இலக்கிய அந்தஸ்துகளையும் பெற்றுத் துலங்குகின்றனர்.  [தாகூர், முல்க்ராஜ் ஆனந்த், ராஜாராவ், ஆர் கே நாராயண், விக்ரம் சேட், ரோஹின்டன் மிஸ்திரி, அமிதவ் கோஷ், நயன்தாரா சேகல், கமலா தாஸ், ஷோபா டே, அருந்ததி ராய், சேட்டன் பகத் உள்ளிட்ட எத்தனையோ எழுத்துக்காரர்கள்]. 

இது மட்டுமன்றி, இந்தியாவைப் பொறுத்தவரை, ஆங்கிலம் அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் மூலாதாராமாகவும் உள்ளது.  வெளிநாடுகளுக்கு பிழைப்புக்காக செல்லும் இந்தியர்களின் ஆங்கில மொழி வன்மை அவர்களுக்கு எத்தனையோ வழிகளில் அனுகூலமாகிறது.  உலோகப் பயன்பாட்டு அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து இருநூறு மைல் தொலைவில் இருக்கும் நியுரம்பெர்க் [இரண்டாம் உலகப் போர் புகழ்!] என்ற சிறு நகருக்கு சென்றிருக்கும் நண்பரின் மகன் தனது ஆய்வையும், ஆசிரியப் பணியையும் ஆங்கிலத்திலேயே மேற்கொண்டு வருகிறார் என்ற செய்தி, முற்றிலும் நவீனமயமான மேற்கத்திய நாடுகளிலும் ஆங்கிலம் பெற்றுள்ள செல்வாக்கை விளக்கப் போதுமானது.

TEACHING ENGLISH THROUGH MOVIES

| Monday, October 5, 2015
 
SOME TIME, SOME PLACE, IT CAN BE DONE..


Introduction
Teachers in English are, in general circumstances, depend very much on the prescribed textbooks to teach their students in the language. Their imagination and creativity are restrained within the scope of the textbook. Any teacher who digresses from the pages of the textbook to keep his / her students engaged in any language activity other than the ones prescribed in the textbook will eventually be found fault with by the system. Language activities in the textbooks are graded and are designed keeping in mind the ‘continuum of learning’. Besides, the textbook activities are designed by ‘experts’ who are vested with unlimited powers to decide ‘who should learn what’.

Inanimate learning materials
In spite of all these apparent advantages, most of our textbooks fail to enliven the learners. Most of the lessons tend to be didactic in nature and ‘talk over the heads’ of the students. Some lessons are found to be inappropriate to the chronological and mental age of the students. As the language activities, at least some of them, are designed on the content of the prose lesson / poem that are cadaverous in nature, the students naturally are bored and are not inclined to involve themselves in the activities. Moreover, some lessons are written by the experts only to suit to certain exercises they already decided. For these reasons, an above-average teacher would find the textbook incapable of giving him / her any scope to experiment with new ideas. After all, learning can never afford to be monotonous. Learning itself is innovative in spirit and adventurous in action.

Realizing this, educational boards all over the world have begun to be more lenient in prescribing the learning materials brought under the scope of curriculum. In the changed scenario, “teacher autonomy” includes the liberty for the teacher to decide not only ‘how to teach’ but also ‘what to teach’. In the changing dynamics of pedagogical set up, a sensitive teacher is awake to his / her environment and observes the surrounding with a pair of ‘professional eyes’.

Mass Media in ELT
The teacher should realize the influence mass media exercise on the young minds. That would end up in vain. There is no point in dissuading our children from the grip of media. Instead, the stakeholders are well advised to exploit the media in innovative ways so as to benefit our children’s cognitive development. The student community is always enchanted by one or other kind of media. Unlike many of their teachers, media never fail to enthuse and influence them. This ‘entertain value’ of the media should be productively channelized into classroom activities. Designing creative activities out of media content is not very difficult for a seasoned teacher. It may pose some initial hiccups but an interested teacher can develop the needed talent to exploit media content to teach his / her students language skills, i.e. listening, speaking, reading and writing. Making use of media for educational purposes would surely result in students’ creative capacity, analytical ability and critical bent of mind.

Past Experiments
One could see, in recent times, some attempts by the textbook writers to make use of newspaper articles for teaching English. In fact, “The Land of Snow” – a prose lesson prescribed for the students of Standard XII (Tamil Nadu Textbook Society, Chennai) is indeed an article appeared in one of the popular weeklies – Outlook Travel. Central Board of Secondary Education came out with a set of brilliant textbooks for Standard IX and X two decades ago with the theme title ‘Interact in English’. Media contents were profusely made use of in the making of those textbooks. Probably for this very reason, these books were instant hits among the student community. They could wade through the pages even without navigating help of the teacher. Language exercises were ingeniously designed and the question paper format was aimed at testing reading, writing and analytical ability of the students.

Making Use of Movies in English Classrooms
English movies provide ample scope to teach our students reading and listening skills. One may argue that it is not possible for the teacher to make the students watch movies in the classroom for two reasons:
[i] lack of technical facility
[ii] insufficient time
Both these hurdles can be overcome by asking the students to watch the movies at home beforehand. And, in special occurrences, where the technical feasibility is in place, the students can be shown important scenes of select film. This should be followed by language activities like
[i] asking questions about a particular scene
[ii] administering an MCQ on the theme, narration, scene details, characters, and backdrop details
[iii] discussions in small groups
[iv] asking the students to find out expressions and words that are used only in spoken English and so on.
At the secondary and higher secondary levels, making use of movies can turn out to be very effective strategy provided the teacher should very carefully select the film that he / she recommends for the students. The teacher has to bear in mind the cultural differences that exist between Anglo-American and Indian societies.

Most of English movies have subtitles which play an important role in sustaining students’ attention throughout the course of the movie. This writer would very often tell his teacher friends that films are the only source for the learner of English language to experience authentic English and the subtitles enable viewers to understand the nuances of the language as seeing the expressions written is much more helpful than the expressions heard. In short, movies provide the students accelerated reading and learning exposure.

Activity with Fun
This writer experimented “Movies as Learning Content” with the first year students of an engineering college located in the outskirts of Salem city. Eight movies were screened over the span of two weeks to the students. At the end of each movie, an MCQ was administered to the students. Each MCQ consisted of 30 questions and the time given to the students was 20 minutes. The answers were then read out in the public address system. It could be observed that almost all the students scored total or near total scores in all the post–screening tests. This should be judged spectacular considering that most of the students were from rural background and from vernacular medium of instruction. To make such attempts successful, the teacher is supposed to do some homework. He / She should watch the movie many times beforehand and design an MCQ carefully. In the experiment specified above, the following films were screened keeping in mind the mental age cum chronological age of the students, cultural differences, suitability of the content, role of language in narrative texture among others.
[1] Casablanca
[2] Roman Holiday
[3] Since You Went Away
[4] Taken
[5] Rules of Engagement
[6] Chocolat
[7] Vantage Point and
[8] Unstoppable
Watching a movie is always a fun activity. It relaxes one’s mind and body. Enjoyment could be the major focus in screening the movie and added to the follow-up language tasks, this could carry immense ‘educative’ value also.

Conclusion
Many teachers may argue that English movies pose cultural and social issues. This could be right in one perspective at least. If the movies selected are not ‘very appropriate’ ones, they could not only be wasteful but also counterproductive. Another argument could be why a cultural risk should be brought into classrooms. But, in the history of English Language Teaching in India, many experiments have already been taken, though the results produced out of them are better left unsaid. In the opinion of this writer, “Teaching English Through Movies” is not a potential risk but a promising opportunity. Such attempts should be taken though there may be some bottlenecks on the way.
As poet Janet Rand says,
To try is to risk failure,
But risks be taken, because the greatest risk in life is to risk nothing.”